சமீபகாலமாக கொரோனா மக்கள் மற்றும் பல பிரபலங்கள் உயிரை பறித்தது ஒரு சிலர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர் அந்த வகையில் சமீபத்தில் கூட விவேக் மாரடைப்பால் மரணமடைந்தார் என செய்திகள் வெளிவந்தது அவரை தொடர்ந்து தற்போது கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் நேற்று ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது திடீர் மாரடைப்பு வந்து இறந்துள்ளார்.
உடல்நிலை சரியில்லாத போதும் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார் அப்போது திடீரென மாரடைப்பு வந்ததையடுத்து புனித் ராஜ்குமாரை தனியாருக்கு சொந்தமான விக்ரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார் இதனையடுத்து திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், மக்கள், ரசிகர்கள் கூட்டம் அவரை காண வந்தது.
புனித் ராஜ்குமாருக்கு 46 வயதுதான் ஆகிறது அதற்குள் இயற்கை எழுதியது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது இருப்பினும் அவரது உடலை நேரில் வந்து பலரும் அஞ்சலி செலுத்தினர். சிலர் வர முடியாத காரணத்தினால் இணையதள பக்கங்களில் அவருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர் அப்படி அஜித் ஷாலினி ஆகிய இருவரும் சமூக வலைதளப் பக்கத்தில் இரங்கல் தெரிவித்தனர்.
அவரை தொடர்ந்து பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் ஒருசிலர் நேரில் அஞ்சலி செலுத்தியதோடு அவரது இறுதி ஊர்வலம் வரை கலந்து கொண்டனர் அந்த வகையில் கன்னட டாப் ஸ்டாரான யாஷ் கலந்து கொண்டார். மேலும் ஆரம்பத்தில் இருந்து இறுதி ஊர்வலம் போகும் வரை இருந்தார்.
மேலும் புனித் ராஜ்குமாரின் உடலை எடுக்கும் போது கூட அவர் தாங்கி பிடித்து தூக்கி சென்ற வீடியோ இணைய தள பக்கத்தில் ஷேர் செய்யப்பட்டு தற்போது வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பலரும் இது தான் சினிமாவில் இருக்கும் ஒற்றுமை எனக்கூறி அந்த மேலும் பரப்பி வருகின்றனர்.