நயன்தாராவின் தங்கையாக நடித்த சரண்யாவா இது.! அதுவும் தற்பொழுது இரண்டு குழந்தைக்கு தாய்.! புகைப்படம் உள்ளே

nayanthara

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் தனுஷ் மற்றும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா இவர்களின் நடிப்பில் 2008ஆம் ஆண்டு வெளியான யாரடி நீ மோகினி திரைப்படத்தில் நயன்தாராவின் தங்கையாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை சரண்யா மோகன்.

இவர் முதலில் மலையாளத் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தான் சினிமாவிற்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவருக்கு பல படங்களில் நடிகை மற்றும் துணை நடிகையாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் விஜய் நடிப்பில் வெளிவந்த வேலாயுதம் திரைப்படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்து ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தார்.

இத்திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதால் பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் சினிமாவில் கலக்கி வந்த சரண்யா மோகன் திடீரென்று திருமணம் செய்து கொண்டார்.

சரண்யா மோகன்  திருமணத்திற்கு பிறகு சினிமாவில் பெரிதாக ஆர்வம் காட்டாமல் இருந்து வருகிறார். இந்நிலையில் சரண்யா மோகன் மற்றும் அவருடைய கணவர், மகன்,  மகள் ஆகியோர் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

saranya
saranya