நடிகர் அருண் விஜய் அண்மை காலமாக ஆக்சன் திரைப்படங்களை அதிகம் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் அண்மையில் நடித்த குற்றம் 23, தடம் போன்ற படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது அதைத் தொடர்ந்து முதல் முறையாக இயக்குனர் ஹரி உடன் இணைந்து நடிகர் அருண் விஜய்.
யானை திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த படம் நேற்று வெளியானது. யானை படம் முழுக்க முழுக்க சென்டிமென்ட், ஆக்சன் கலந்த திரைப்படமாக இருப்பதால் தற்பொழுது மக்கள் மற்றும் ரசிகர்கள் இந்த படத்தை பார்த்து கொண்டாட ஆரம்பித்து உள்ளனர்.
இதுவரை பாசிட்டிவான விமர்சனமே வந்துள்ளதால் இந்த படம் வருகின்ற நாட்களில் நன்றாக ஓடுமென கூறப்படுகிறது யானை திரைப்படத்தில் அருண் விஜய் உடன் இணைந்து யோகி பாபு, ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, ராதிகா என மிகப் பெரிய ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து உள்ளது.
இந்த திரைப்படம் முதல் நாளில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது.தமிழகத்தில் மட்டும் முதல் நாளில் யானை திரைப்படம் சுமார் 4 கோடி வசூலித்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வருகின்ற நாட்களில் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் சனி, ஞாயிறு ஆகிய தேதிகளாக இருப்பதால் மிகப்பெரிய ஒரு வசூலை அள்ளும் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் படத்தைப் பார்த்த பலரும் தற்பொழுது சொல்லி வருவது என்னவென்றால் யானை திரைப்படம் அருண் விஜய்க்கும் ஹரிக்கும் சரி மிகப்பெரிய ஒரு சிறந்த திரைப்படமாக இருக்கும் என கூறி வருகின்றனர் இதனால் யானை படக்குழு தற்போது சந்தோஷத்தில் இருந்து வருகிறது.