சினிமா உலகில் தனக்கு எது சூப்பராக வருமோ அதை தொடர்ந்து செய்தாலே போதும் நாம் வெற்றியை நோக்கி ருசிக்கலாம். அந்த வகையில் இயக்குனர் ஹரி ஆக்சன் கமர்சியல் படங்களை கொடுத்து வெற்றி கண்டு வருகிறார். இவர் இதுவரை இயக்கிய பெரும்பாலான திரைப்படங்கள் ஹிட் படங்களாகவே இருந்து வந்துள்ளன.
இதுவரை இயக்குனர் ஹரி சூர்யா, விக்ரம், தனுஷ் போன்ற பல டாப் ஹீரோக்களை வைத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார் தற்பொழுது கூட நடிகர் அருண் விஜயை வைத்து யானை என்ற திரைப்படத்தை உருவாக்கியிருந்தார் இந்த படம் சில தினங்களுக்கு முன்பு திரையரங்கில் வெளிவந்து..
மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பற்றி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் அருண் விஜய் உடன் இணைந்து ராதிகா சரத்குமார், பிரியா பவானி சங்கர், யோகி பாபு, சமுத்திரகனி மற்றும் பல பிரபலங்கள் நடித்தனர் யானை படம் முழுக்க முழுக்க ஆக்சன் செண்டிமெண்ட் கலந்த திரைப்படமாக..
இருப்பதால் அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது தற்பொழுது வரை யானை திரைப்படம் சுமார் 11 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வருகின்ற நாட்களிலும் நல்ல வரவேற்பையும் வசூலையும் யானை படம் அல்லும் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.
இதனால் பிரம்மாண்டமான ஒரு வசூலை யானை திரைப்படம் அள்ளுவதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை.. விக்ரம் படத்தை தொடர்ந்து வெளிவந்த படங்களில் யானை திரைப்படம் தான் நல்ல வசூலை அள்ளிய திரைப்படமாக பார்க்கப்படுகிறது.