திரை உலகில் நடக்கும் சில விஷயங்களை வெளிப்படையாக பேசுபவர்கள் சிலரே இருக்கின்றனர் அவர்களில் ஒருவர் பயில்வான் ரங்கநாதன். இவர் சினிமாவில் நடக்கும் பிரச்சனைகள் மற்றும் நடிகர் நடிகைகளின் வாழ்க்கை நடக்கும் விஷயம் மற்றும் அவர்களின் அந்தரங்க விஷயங்களை வெளிப்படையாக கூறி வருகிறார்.
அதுவும் டாப் நடிகர்கள் தொடங்கி இளம் நடிகர், நடிகைகள் அனைவர் பற்றி தனக்கு தெரிந்த தகவல்களை வெளிப்படையாக போட்டு உடைத்து வருகிறார் அதனால் பயில்வான் ரங்கநாதன் எப்பொழுதுமே ஒரு பேசும் பொருளாகவே பார்க்கப்படுகிறார் இவர் திரை உலகில் பல படங்களில் நடித்திருந்தாலும் இப்பொழுது படங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டு பத்திரிக்கையாளராக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.
இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கோமாளி, லவ் டுடே படங்களை இயக்கி வெற்றிய கண்ட பிரதீப் ரங்கநாதன் பற்றி மேடையில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் அவர் படத்தின் விழா ஒன்றில் கலந்து கொண்டார் அப்பொழுது பேசியது.. கோடிகளில் செலவு செய்து வெளியாகும் படங்கள் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டாலும்.
பெரிய நஷ்டத்தை கொடுப்பதோடு மட்டுமல்லாமல் கதையில் கவனம் செலுத்துவது இல்லை என கூறினார். மேலும் பேசிய பயில்வான் ரங்கநாதன்.. கவின் நடித்த டாடா இடத்தில் பெரிய நடிகர்கள் இல்லை என்றாலும் கதை சிறப்பாக இருந்ததால் அந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது அதேபோல் லவ் டுடே படம் ஓடலையா..
பிரதீப் ரங்கநாதன் எல்லாம் ஒரு ஹீரோவா யாராவது ஒத்துப்பாங்களா அப்புறம் ஒடலையா என்று பேசினார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர் அஜித் ஸ்பான்சர் இல்லை என்றுதான் பைக் ரேஸில் இருந்து விலகியதாக என்னிடம் புலம்பினார் என பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார் இந்த தகவல் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது.