அண்மை காலமாக சிவகார்த்திகேயன் இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்புகளை அள்ளி வீசுகிறார் அந்த வகையில் நெல்சன்னை தொடர்ந்து இளம் அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி – க்கு வாய்ப்பு கொடுத்தார். இவர் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் திரைப்படம் தான் டான்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சமுத்திரகனி, எஸ் ஜே சூர்யா, பிரியங்கா அருள் மோகன், காமெடி நடிகர் சூரி, சிவாங்கி என ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து அசத்தியது இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்திருந்தது அனிருத் இசையமைத்திருந்தார் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று..
வசூல் ரீதியாகவும் அடித்து நொறுக்கி ஓடிக்கொண்டிருக்கிறது டாக்டர் திரைப்படத்தை தொடர்ந்து 100 கோடி கிளப்பில் டான் திரைப்படம் இணைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. வெறும் 12 நாட்களில் முடிவில் மட்டுமே சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் உலக அளவில் 100 கோடியை தொட்டு அசத்தியது அதனை தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிய டான் திரைப்படம்.
இதுவரை தமிழகத்தில் மட்டுமே 100 கோடியை தொட நெருங்கி வருவதாக கூறப்படுகிறது மேலும் உலக அளவில் இதுவரை 111 கோடி வசூலை அள்ளி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வருகின்ற நாட்களிலும் எந்த ஒரு பெரிய நடிகரின் படமும் இல்லாமல் இருப்பதால் நடிகர் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்தின் வசூல் குறையாது என கூறப்படுகிறது.
இதனால் சிவகார்த்திகேயனின் சினிமா கேரியரில் மிகப்பெரிய ஒரு புதிய சாதனையை டான் திரைப்படம் நிகழ்த்தும் என கூறப்படுகிறது மறுபக்கம் இன்னும் சில வெற்றி திரைப்படங்களை சிவகார்த்திகேயன் கொடுத்துவிட்டால் சிவகார்த்திகேயனின் சினிமா பயணம் அஜித், விஜய்க்கு நிகராக போய்விடும் எனவும் கூறி வருகின்றனர்.