பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் சமூக வலைத்தளமான டுவிட்டர் பக்கத்தில் அதிகம் செய்யப்பட்ட நடிகைகள் மற்றும் நடிகர்களின் பெயர்களை ட்விட்டர் தளம் வெளியிடுவது வழக்கம்தான் அந்த வகையில் தற்போது டாப் 10 இடத்தில் உள்ள பிரபல நடிகைகளின் பட்டியலை டுவிட்டர் தளம் வெளியிட்டுள்ளது.
இவ்வாறு வெளிவந்த பட்டியலில் நடிகை கீர்த்தி சுரேஷ் முன்னிலை வகிக்கிறார். அந்த வகையில் 2020ஆம் ஆண்டு அதிக அளவு ரசிகர்களால் ட்வீட் செய்ய பட்ட மற்றும் பகிரப்பட்ட நடிகையின் பெயர் என்னவென்றால் கீர்த்திசுரேஷ் ஆகையால் இவர் தான் முன்னிலை வகிக்கிறார் என டுவிட்டர் தளம் வெளியிட்டுள்ளது.
அதேபோல இரண்டாவது இடத்தை நடிகை பூஜா ஹெக்டே படித்துள்ளார் இவர் தற்போது தளபதி நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் ஆனால் இவர் இதற்கு முன்பாகவே அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான அளவைகுண்ட புரம்லோ என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமாகி விட்டார்.
மூன்றாவது இடத்தை நடிகை சமந்தா பெற்றுள்ளார் இவ்வாறு அவர் பிரபலம் ஆவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் அவருடைய ஆசை காதல் கணவன் நாகசைதன்யா விவாகரத்து செய்த விவரம் தான் அவரை இந்த அளவிற்கு டுவிட்டர் தளத்தில் பிரபலமாகி உள்ளது.
4வது இடத்தில் நடிகை காஜல் அகர்வால் உள்ளார் இவர் சமீபத்தில் கர்ப்பமாக உள்ளாரா இல்லையா என்பது கேள்வி குறியாக இருந்த வகையில் இதற்கான பதிலை என்றும் ரசிகர்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும் ஐந்தாவது இடத்தில் நடிகை மாளவிகா மோகனன் இடம்பெற்றுள்ளார் அதேபோல ஆறாவது இடத்தில் ராகுல் ப்ரீத் சிங் மற்றும் 7வது இடத்தில் சாய்பல்லவி எட்டாவது இடத்தில் தமன்னா ஒன்பதாவது இடத்தில் அனுஷ்கா 10வது இடத்தில் அனுபமா பரமேஸ்வரன் ஆகியவர்கள் இடம் பெற்றுள்ளார்கள்.
இதில் நயன்தாராவின் பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.