80, 90 காலகட்டங்களில் இருந்து தற்போது வரையிலும் சினிமாவில் வெற்றியை நோக்கி ஓடி கொண்டிருப்பவர் உலகநாயகன் கமலஹாசன் சினிமாவில் இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார் தற்போது கூட இவர் லோகேஷ் கனகராஜ் உடன் முதல் முறையாக கைகோர்க்கும் விக்ரம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்தை மிக பிரமாண்ட பொருட்செலவில் கமலின் ராஜ்கமல் பிலிம் பேக்டரி தயாரித்து வருகிறது. இந்தப் படத்தில் கமலுடன் இணைந்து விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர் மேலும் புதுமுக நடிகையாக ஷிவானி நாராயணன், விஜே மகேஸ்வரி போன்றோரும் அறிமுகமாகி உள்ளனர் இந்த திரைப்படத்தில் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக நாயகன் கமலஹாசன் சினிமா, அரசியல், தொகுப்பாளர் என அனைத்திலும் கால் தடம் பதித்து வெற்றி கண்டு வந்த நிலையில் தற்போது அடுத்த கட்டத்தை நோக்கி பாய ரெடியாக இருக்கிறார். உலகநாயகன் கமலஹாசன் பிக் பாஸ் சீசன் 5 தொடங்கும்போது அவர் ஒரு விசயத்தை குறிப்பிட்டிருந்தார்.
அதாவது புதிதாக ஆடை வடிவமைப்பை வணிகத்தில் இறங்குவேன் என கூறியிருந்தார் அவர் சொன்னபடியே நவம்பரில் அமெரிக்கா சிகாகோவில் ஹவுஸ் ஆஃப் காதர் என்ற ஒரு ஆடை நிறுவனத்தை அங்க தொடங்கியிருக்கிறார் அதை அறிவிக்கும் விதமாக உலகநாயகன் கமலஹாசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு பதிவை போட்டு புகைப்படம் வெளியிட்டு உள்ளார்.
மேலும் இச்செய்தியை பார்த்த ரசிகர்கள் பலரும் கமலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் மேலும் நீங்கள் பலரது குடும்பத்தை தற்பொழுது வாழ வைக்கப் போகிறீர்கள் என கூறியும் நல்லவிதமாகவே கமெண்ட் கூறிவருகின்றனர். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.
Fashion is being civil yet disobedient.
தறி கெட விடமாட்டோம். நன்னூல் காப்போம்.
Going to Chicago USA, this November to launch @kh_khaddar @amritharam2 @deepikalogan
PC: @sunderramu pic.twitter.com/TzG3vuXRma— Kamal Haasan (@ikamalhaasan) October 20, 2021