தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்துடன் பிரபல நடிகராக வலம் வருபவர் தான் கமலஹாசன் இவர் அந்த காலத்திலிருந்து இந்த காலம் இவரை முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார் அந்த வகையில் இவர் நடிப்பில் வெளிவந்த திரை படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு அர்த்தம் உடையதாக இருக்கும்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகர் கமலஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது மேலும் இத் திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாஸில் போன்ற முக்கிய பிரபலங்கள் நடிப்பதன் காரணமாக இத்திரைப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மிக அதிகமாக உள்ளது.
அந்த வகையில் இத்திரைப்படத்தின் பஸ்ட் கிளன்ஸ் வீடியோ ஒன்று சமூக வலைதள பக்கத்தில் நேற்று வெளியாகின இவ்வாறு வெளிவந்த இந்த வீடியோவானது மிக வைரலாக பரவியது மட்டுமல்லாமல் ரசிகர்களை எளிதில் கவர்ந்து விட்டது.
அதுமட்டுமில்லாமல் இன்று கமல்ஹாசனின் பிறந்த நாள் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் இந்நிலையில் அவருடைய அரிதான மற்றும் சுவாரஸ்யமான சில புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருவது மட்டுமல்லாமல் அந்த புகைப்படங்களை ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகர் கமலஹாசன் அவர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணனிடம் சிறுவயதில் பரிசு வாங்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளப் பக்கத்தில் வெளியாகியுள்ளது இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.