உலக நாயகன் கமலஹாசனுக்கு கொரோனா.! பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவது யார்.? பதட்டத்தில் ரசிகர்கள்.

kamal
kamal

சினிமாவுலகில் அசைக்க முடியாத நாயகனாக வலம் வந்து கொண்டிருந்த நடிகர் கமல் சமீபகாலமாக தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டு எல்லாவற்றிலும் பயணித்து வருகிறார். அந்த வகையில் இவர் அரசியல், சின்னத்திரையில் தொகுப்பாளர் மற்றும் அமெரிக்காவில் ஒரு வியாபாரம் என தன்னால் முடிந்த எல்லாவற்றிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

போதாத குறைக்கு சினிமாவில் இவர் ராஜ்கமல் என்ற ஒரு தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார் இப்படி ஓடிக்கொண்டிருக்கும் கமல் திடீரென பல வருடங்கள் கழித்து மீண்டும் சினிமா உலகில் நடிக்க ஆர்வம் காட்டி உள்ளார் இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்த்து “விக்ரம்” திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளது.

இப்படி இருக்கும் போதே விஜய் டிவியில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார் நான்கு நிகழ்ச்சிகளை சிறப்பாக தொகுத்து வழங்கிய கமலஹாசன் ஐந்தாவது சீசனையும் அவரே தொகுத்து வழங்கி வந்தார். சமிபத்தில் அமெரிக்கா சென்று திரும்பினர் கமலஹாசன்.  இந்த நிலையில் தனக்கு கொரோனா இருப்பதை உறுதிப்படுத்தி அவரே தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியுள்ளார்.

பிறகு கமல் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தன்னை தனிமைப்படுத்தி கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கமல் பாதிக்கப்பட்டுள்ளது தற்பொழுது ரசிகர்களையும், அரசியல் தலைவர்களையும் பெரிதும் கவலை அடைய செய்துள்ளது மேலும் அவர் வெகு விரைவிலேயே மீண்டு வரவேண்டும் என கேட்டுள்ளனர் இப்படி இருக்கின்ற நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்ற கேள்வியும் தற்போது மக்கள் மனதில் எழுந்துள்ளது.

தற்போது அதற்கு பதில் கிடைத்துள்ளது கமல் இடத்தை அவரது மகள் சுருதிஹாசன் நிரப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிக் பாஸ் சீசன் 3 இல் சிறிது நாட்களில் சுருதிஹாசன் தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது அதுபோல தான் இந்த நிகழ்ச்சியும் அவர் தொகுத்து வழங்கினாலும் வழங்கலாம் என தெரியவந்து உள்ளது ஆனால் இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரவில்லை.