விக்ரம் படத்தின் வெற்றியால் தாறுமாறாக சம்பளத்தை உயர்த்திய “உலகநாயகன் கமலஹாசன்” – ரஜினி, விஜய்யை விட அதிகம்.!

kamal-
kamal-

80 காலகட்டங்களில் இருந்து இப்பொழுது வரையிலும் படங்களில் ஹீரோவாக நடித்து ஓடிக்கொண்டிருப்பவர் உலக நாயகன் கமலஹாசன். இதுவரை பல்வேறு படங்களில் பல்வேறு கெட்டப்புகளை போட்டு நடித்து மக்கள் மற்றும் ரசிகர்களை மகிழ்வித்து உள்ளார். ஆனால் அண்மை காலமாக சினிமாவில் நடிப்பதையும் தாண்டி உலக நாயகன் கமலஹாசன்.

சின்னத்திரை, பிஸ்னஸ், அரசியல், தயாரிப்பு நிறுவனம் போன்றவற்றிலும் வெற்றியை கண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இருப்பினும் சினிமா உலகில் இருந்து வரும் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அந்த வகையில் நான்கு வருடங்கள் கழித்து இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

சொன்ன விக்ரம் படத்தின் கதை  கமலுக்கு ரொம்ப பிடித்து போகவே அந்த படத்தில் நடித்தார் மேலும் அந்த படத்தை தானே முன்வந்து தயாரிக்கவும் செய்தார். படம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதன் காரணமாகவே வசூலிலும் அடித்து நொறுக்கியது விக்ரம் திரைப்படம் இதனால் கமலுக்கு ஏகப்பட்ட லாபம்.

விக்ரம் திரைப்படத்தை தொடர்ந்து உலகநாயகன் கமலஹாசன் தேவர்மகன் 2,  இந்தியன் 2, சபாஷ் நாயுடு ஆகிய படங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் உலகநாயகன் கமலஹாசன் விக்ரம் படத்தை தொடர்ந்து அடுத்த படத்திற்காக எவ்வளவு சம்பளம் வாங்க போகிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி பார்க்கையில் உலக நாயகன் கமலஹாசன் விக்ரம் படத்தை தொடர்ந்து நடிக்க உள்ள புதிய படங்களுக்காக சுமார் 130 கோடி சம்பளம் வாங்குவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன விக்ரம் படத்தில் நடித்ததற்காக 50 கோடி சம்பளம் வாங்கிய உலகநாயகன் கமலஹாசன் அதிலிருந்து பல கோடி சம்பளத்தை உயர்த்தி உள்ளது. பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.