மகள் பிறந்தநாளை செம்மையாக கொண்டாடிய உலக நாயகன் கமல்.! இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்.

akshara haasan
akshara haasan

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக வலம் வந்து கொண்டிருப்பவர் உலகநாயகன் கமலஹாசன். சமீபகாலமாக வெள்ளித்திரையில் மிகப்பெரிய அளவில் படங்களில் நடிக்காமல் தனது என்னத்தை மாற்றி அரசியல் மற்றும் சின்னத்திரையில் பயணிக்க வருகின்றார்.

இது அவருக்கு நல்ல வாய்ப்பையும் கொடுத்து வருகிறது. அதிலும் சமீபகாலமாக ஓரிரு திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டியுள்ளார். அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்த்து விக்ரம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். விக்ரம் படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

அதற்கு முக்கிய காரணம் கமலுடன் இணைந்து பகத் பாசில் மற்றும் விஜய் சேதுபதி போன்ற பல டாப் நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஓரிரு இயக்குனர்களிடம் கதை கேட்டு உள்ளார். இப்பொழுது பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியையும் இவர்தான் சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரைத் தொடர்ந்து இவரது மகளான அக்ஷராஹாசன் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகிய இருவரும் தென்னிந்திய சினிமாவில் பல்வேறு மொழிகளில் பல படங்களில் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் உலக நாயகன் கமலஹாசனின் இரண்டாவது மகளான அக்ஷராஹாசனுக்கு இன்று பிறந்தநாள் என்பதால் உலகநாயகன் கமலஹாசன் மற்றும் சுருதிஹாசன் ஆகியோருடன் இணைந்து பிறந்த நாளை கொண்டாடினார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில இணைய தள பக்கத்தில் தீயாய் பரவி வருகின்றன இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள். புகைப்படத்தை பார்த்த ரசிகர்களும் தற்போது அக்ஷராஹாசன் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.akshara haasan

akshara haasan
akshara haasan