நடிகை அமலாபால் தமிழ் சினிமாவில் கால் தடம் பதித்த போது தொடர்ந்து கிராமத்து மற்றும் வித்தியாசமான திரைப்படங்களில் நடித்து தனது திறமையை காட்டி மக்கள் மற்றும் ரசிகர்களை சம்பாதித்தார். ஒரு கட்டத்தில் முன்னணி நடிகரின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது அதை சரியாக பயன்படுத்தி முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை அமலாபால் பெற்றார்.
சினிமா உலகில் சிறப்பான படங்களை கொடுத்தாலும் அதே சமயம் சர்ச்சைகளிலும் சிக்குவதை வழக்கமாக அமலா பால் வைத்திருந்தார். இப்படி ஓடிக்கொண்டிருந்தாலும் இயக்குனர் ஏ எல் விஜயை ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டார் திருமண வாழ்க்கை சிறப்பாக போய்க்கொண்டிருந்த நிலையில் சில பிரச்சனைகள் காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
அதன்பின் நடிகை அமலாபாலுக்கு ஒன்னு ரெண்டு படங்கள் வெற்றி படங்களாக மாறினாலும் பிறகு சொல்லிக் கொள்ளும்படி வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வருகின்றன. இதனால் இருக்கின்ற ரசிகர்களையாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக நடிகை அமலாபால் தொடர்ந்து புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அது மட்டுமல்லாமல் சின்னத்திரை பக்கமும் தலைகாட்ட தொடங்கி உள்ள அமலாபால் விஜய் டிவி தொலைக்காட்சியில் ராஜு வீட்டுல பார்ட்டி என்னும் நிகழ்ச்சி தற்பொழுது சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது இதில் நடிகை அமலாபால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்பொழுது பல்வேறு சினிமா குறித்தும் வாழ்க்கை குறித்தும் அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர் தயக்கமே இல்லாமல் பதிலளித்தார். அமலா பாலிடம் டீன் ஏஜ்ல யாரையாவது காதலித்து உள்ளீர்களா என கேட்டுள்ளனர் அதற்கு அவர் பதில் அளித்தது டீனேஜ் வயது இருக்கும் பொழுது ஒருவரை அமலாபால் காதலித்தும் உள்ளாராம். அவருடன் ஒருமுறை திரையரங்கிற்கு சென்று..
படம் பார்த்ததாகவும் கார்னர் சீட்டில் அமர்ந்து படம் பார்க்கும் பொழுது தனது காதலனுக்கு முத்தம் கொடுத்துள்ளதாகவும் வெளிப்படையாக கூறியுள்ளார். ஆனால் அந்தக் காதலன் யார் அவர் பெயர் என்ன என்பதை மட்டும் அவர் விலாவாரியாக சொல்ல முன் வரவில்லை. இதையெல்லாம் வெளியே சொல்லலாமா என அமலாபாலுக்கு கமெண்ட் அடித்து வருகின்றனர்.