தமிழ் சினிமாவில் இயக்குனராக சாதித்து காட்டிய பெண்கள்.! இதோ லிஸ்ட்

women-directors

தமிழ் சினிமா பெண்களுக்கு நிறைய வாய்ப்பு கொடுத்துக் கொண்டுதான் வருகிறது. அந்த வகையில் நடிகையாகவும் பின்னணி பாடசியாகவும் தனது தனித்துவமாக திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வரிசையில் பெண் இயக்குனர்களைப் பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

ஹலீதா ஷமீம் :- இவர் சில்லு கருப்பட்டி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் நான்கு வெவ்வேறு காதல் கதைகளை மையமாகக் கொண்ட உருவாக்கப்பட்டது மேலும் இப்படத்திற்காக இயக்குனர் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டார். மேலும் ஹலீதா தனது மின்மினி படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்:- தனுஷ் நடித்த 3 என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்திற்காக அந்த ஆண்டு சிறந்த அறிமுக இயக்குனரான விருதுகளையும் அவர் பெற்றார். இந்த நிலையில் தனது கணவரான தனுஷ் உடன் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் அதன் பிறகு தற்போது மீண்டும் இணையுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. அது மட்டுமல்லாமல் திரும்பவும் சினிமாவில் இயக்குனராக மீண்டும் வருகிறார் என்றும்  கூறப்படுகிறது.

சுதா கொங்கரா :- இவர் தமிழில் இயக்கிய திரைப்படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றது என்று தான் சொல்ல வேண்டும் அந்த வகையில் இறுதிச்சுற்று, பாவ கதைகள், சூரரைப் போற்று ஆகிய அனைத்துமே இவர் இயக்கியுள்ளது தான். அதுமட்டுமல்லாமல் இவர் சூர்யாவை வைத்து இயக்கிய சூழரைப் போற்று திரைப்படத்திற்காக தேசிய விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.

காயத்ரி புஷ்கர் :- தனது கணவருடன் இணைந்து விக்ரம் வேதா என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி முக்கிய இடத்தில் நடித்து  உள்ள இத்திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. மேலும் இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ததும் இயக்குனர் காயத்ரிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

கிருத்திகா உதயநிதி:- இவர் சிவா, பிரியா ஆனந்த், சந்தானம் நடித்த வணக்கம் சென்னை என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் இரண்டு நபர்கள் எப்படி காதலிக்கிறார்கள் என்பதை மையமாகக் கொண்ட காதல் நகைச்சுவை படமாக அமைந்தது. இந்த படம் என்னதான் வெற்றி பெறாமல் இருந்தாலும் வணிக ரீதியாக வெற்றி பெற்றது.