உலகத்தில் மிக கொடுமையான வலிகளை தாங்குவார்கள் பெண்கள் தான் – கர்ப்பமாவது குறித்து பேசிய சமந்தா.

samantha
samantha

நடிகை சமந்தா திரை உலகில் தட்டுத்தடுமாறி இருந்த காலங்கள் போய் தற்போது தவிர்க்க முடியாத நடிகையாக தன்னை மாற்றிக் கொண்ட பிறகு தனக்கு என்ன தோணுகிறதோ அதை எல்லாம் தேர்ந்தெடுத்து நடித்து வெற்றி கண்டு வருகிறார்.

நடிகை சமந்தாவுக்கு தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது அதோடு மட்டுமல்லாமல் வெப்சீரிஸ்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இதனால் அவரது வரவேற்பு உயர்ந்து கொண்டே இருக்கிறது படங்களில் இவருக்கு எந்த ரோல் கொடுத்தாலும் அதை ஏற்று நடிக்க இருக்கிறாராம்.

ரொமாண்டிக் சென்டிமென்ட் என எதுவாக இருந்தாலும் அதில் தனது திறமையை காட்டி வருகிறார். புஷ்பா படத்தில் கூட நாம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு ஊ சொல்றியா மாமா பாடலுக்கு தம்மாத்துண்டு டிரெஸ்ஸை போட்டுக்கொண்டு தனது அழகான மேனியை காட்டி வளைத்து வளைத்து இவர் ஆடிய நடனம் ஆடியது பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தது.

அதனைத் தொடர்ந்து மற்றொரு தெலுங்கு  படத்திலும் ஆட இருப்பதாக தெரியவருகிறது. சினிமா உலகில் இப்படி ஓடிக் கொண்டிருக்க மறுபக்கம் தனது தோழிகளுடன் ஊர் சுற்றி வருகிறார். இப்பொழுதே நடிகை சமந்தா சுவிட்சர்லாந்தில் வலம் வருகிறார். இந்த நிலையில் அவர் பேசிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது ஆம் பெண்கள் கர்ப்பம் ஆவது குறித்து பேசியுள்ளார் அவர் சொன்னது  :

பெண்கள் உண்மையாகவே வலிமையானவர்கள்.உலகிலேயே மிகவும் வலியான நிகழ்வு என்றால் அது குழந்தை பிறப்பது தான். அந்த வலியையும் பெண்கள் துணிந்து ஏற்றுக் கொள்கிறார்கள். குழந்தை பிறப்பின் போது உச்சக்கட்ட வலியையும் பெண்கள் தாங்கிக் கொள்கிறார்கள். குழந்தை பிறந்த பிறகும் பல வலிகளை தாங்கிக் கொண்டு வருகிறார்கள் என கூறினார் சமந்தா.