மற்றவர்களை விட பெண்கள் வலுவானவர்கள் – இயக்குனர்களை நான் குறை சொல்லவில்லை.! ஸ்ருதிஹாசன் அதிரடி பேச்சு.

shruthi-haasan
shruthi-haasan

சினிமாவுலகில் வெற்றியடைந்த நடிகர், நடிகைகளை தொடர்ந்து அவரது வாரிசுகளும் சினிமா உலகில் கால்தடம் பதித்து வருகின்றனர். எடுத்தவுடனேயே உச்ச நட்சத்திரங்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெறுகின்றனர். இருப்பினும் வாரிசு நடிகர், நடிகைகளும்  திறமையை தொடர்ந்து வெளிப்படுத்தினால் மட்டுமே நீண்ட தூரம் பயணிக்க முடியும் அதை சரியாக செய்து வருவர் தான் நடிகை சுருதிஹாசன்.

அப்பாவை போல இவரும் சினிமாவில் முதலில் நடிக்க வந்தாலும் தற்போது மற்றவற்றிலும் தனது திறமையை வெளிக்காட்டி அசத்தி வருகிறார். முதலில் தமிழில் சூர்யா நடிப்பில் உருவான ஏழாம் அறிவு திரைப்படத்தில் நடித்து சினிமா உலகில் என்ட்ரி கொடுத்தார் நடிகை சுருதிஹாசன் முதல் படமே அவருக்கு வெற்றிப்படமாக அமைய அடுத்தடுத்து சிறப்பான நடிகர்களுடன் கைகோர்த்தார்.

அந்த வகையில் அஜீத், விஜய், சிம்பு போன்ற டாப் நடிகர்கள் படங்களில் நடித்து ஓடினார் ஒரு கட்டத்தில் மற்ற மொழிகளிலும் வாய்ப்புகள் கிடைத்தது அந்த வகையில் தெலுங்கில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். பங்கு தனது நடிப்பு திறமையையும் தாண்டி  ஆக்ஷன் காட்சிகளில் கூட பின்னி பெடல் எடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார். சமீபத்தில் வெளியான  கிராக் படத்தில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்தார்.

சண்டைக் காட்சிகளில் மிரட்டியும் இருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் தெலுங்கில் ஒரு ஆக்சன் திரைப்படத்தில் நடித்து வருகிறாராம் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகிவரும் சலார் படத்தில் ஹீரோயின்னாக நடித்து வருகிறார் இந்த படம் ஆக்ஷன் நிறைந்த படமாக உருவாகி வருகிறது இந்த படத்திலும் நடிகை சுருதிஹாசன் ஆக்சன் காட்சிகளில் மிரட்டுவதற்காக material arts என்னும் கலையை கற்றுக் கொண்டு வருகிறார்.

இது குறித்து அவர் சமீபத்தில் பேசியது : பெண்களுக்கு சினிமாவில் ஆக்ஷன் காட்சிகள் ரொம்பவே குறைவு தான் இதற்காக இயக்குனரை குறை சொல்ல முடியாது. அதேசமயம் மற்றவர்கள் உதைப்பதை விட பெண்கள் வலுவாக உதைப்பார்கள் பெண்கள் உதைப்பதை பார்க்கவே அழகாக இருக்கும் என கூறினார்.