தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை நயன்தாரா இவர் பல திரைப்படங்களில் நடித்து லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.
திருமணத்திற்கு பிறகு நடிகை நயன்தாரா நடிக்க மாட்டார் என்று ஒரு வதந்தி சோசியல் மீடியாவில் பரவியது ஆனால் அதையும் தாண்டி தற்போது கனெக்ட் என்ற ஒரு திரில்லர் திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மதியம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நயன்தாரா சமீபத்தில் கனெக்ட் திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இது குறித்து பல விமர்சனங்கள் எழுந்துள்ளது அதாவது மற்றவர்கள் தயாரிக்கும் படத்திற்கு பிரமோஷன் செய்யாத நயன்தாரா தான் தயாரித்த படத்திற்கு மட்டும் ஏன் பிரமோஷன் செய்கிறார் என்று பல விமர்சனங்கள் இருந்து வருகிறது.
அந்த வகையில் ரங்கநாதன் நயன்தாராவை விமர்ச்சித்து உள்ளார் அதாவது சினிமாவில் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேரங்களில் நடித்து பிரபலமான பயில்வான் ரங்கநாதன் தற்போது விமர்சகராகவும் இருந்து வருகிறார் அந்த வகையில் நடிகை நயன்தாராவை சரமாரியாக விமர்சித்துள்ளார் அதாவது பத்திரிகையாளர்கள் இல்லையென்றால் நீங்கள் இந்த அளவிற்கு முன்னேறி இருக்க முடியாது.
நயன்தாரா மட்டுமல்ல எந்த ஒரு நடிகராக இருந்தாலும் நடிகையாக இருந்தாலும் பத்திரிகையாளர்கள் தான் அவர்களை வளர்த்து விடுகிறார்கள் அப்படி நயன்தாராவையும் பத்திரிக்கையாளர்கள் தான் வளர்த்து விட்டார்கள் இப்படி இருக்கையில் தான் தயாரித்த படத்திற்கு மட்டும் ப்ரோமோஷன் செய்வது எந்த விதத்தில் நியாயம்.
அது மட்டுமல்லாமல் கனெக்ட் திரைப்படத்திற்காக இசை வெளியீட்டு விழா நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ப்ரோமோஷனில் மட்டும் கலந்து கொண்டுள்ள நயன்தாரா ஏன் இப்படி செய்கிறார் என்று தற்போது ஒரு கேள்வியை முன் வைத்துள்ளார் இயக்குனர் வயல்வான் ரங்கநாதன்.