யாரப்பாத்து நிப்பான் பெயிண்ட் என கூறுகிறீர்கள்!. மேக்கப் இல்லாத வீடியோவை வெளியிட்டு கதிகலங்க விட்ட ஜாக்குலின்.

jackline video:விஜய் டிவியில் எப்படியாவது நுழைந்துவிட வேண்டும் என பல நடிகை மற்றும் நடிகர்கள் ஆசைப்படுவார்கள் ஏனென்றால் விஜய் டிவியில் நுழைந்து விட்டால் கண்டிப்பாக சினிமாவில் என்ட்ரி கொடுத்து விடலாம் என்பதுதான் உண்மை, அதனால்தான் பலரும் விஜய் தொலைக்காட்சியில் நடிக்க வேண்டுமென ஆசைப்படுகிறார்கள்.

அந்த லிஸ்டில் அதே தொலைக்காட்சியில் சாதாரண தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தவர் ஜாக்குலின் இவர் படிப்படியாக இப்பொழுது தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் ஒரு சில வேடங்களில் நடித்து வருகிறார்.

ஜாக்குலின் நயன்தாரா நடிப்பில் வெளியாகிய கோலமாவு கோகிலா திரைப்படத்தில் நயன்தாராவுக்கு தங்கையாக நடித்திருந்தார்.இத்திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றார்.

இந்த நிலையில் ஜாக்லின் விஜய் தொலைக்காட்சியில் பிரபல சீரியலான தேன்மொழி பிஎ சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார், இவரின் மைனஸ் என்னவென்றால் முரட்டு குரல் தான் இவரின் குரலை கேலி செய்யாதவர்களே கிடையாது.

ஆனால் என்னதான் பலர் கேலி செய்தாலும் அதையெல்லாம் காதில் வாங்காமல் தான் முன்னேற வேண்டும் என்ற கொள்கையில் தனது வேலையை கன கச்சிதமாக செய்து முடிப்பார், ஜாக்லின் சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் அந்த வகையில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.

அப்படி சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நிப்பான் பெயிண்ட் என கலாய்த்து வந்தார்கள், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக துளிக்கூட மேக்கப் இல்லாத வீடியோவை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.