தமிழ்சினிமாவில் தோல்வி அடையாத நடிகர்களே கிடையாது, ஒவ்வொரு தோல்வியும் வெற்றியின் ஏணிப்படி என கூறுவார்கள் அப்படித்தான் பல நடிகர்கள் தங்களுடைய கடந்த காலத்தில் பல தோல்விகளை கடந்து வெற்றிக்கனியை ருசித்துள்ளார்கள்.
அதேபோல் இயக்குனர்களும் பல தோல்வி திரைப்படங்களை கொடுத்துள்ளார்கள் ஆனால் இதுவரை தோல்வியே அடையாத சில இயக்குனர்களை பற்றி நாம் பார்ப்போம். இதோ விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் வெற்றிமாறன்- இயக்குனர் வெற்றிமாறன் இதுவரை இயக்கிய திரைப்படங்கள் தோல்வி அடைந்ததில்லை, அவர் இயக்கிய திரைப்படம் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, விசாரணை, அசுரன் என 5 திரைப்படங்களை இயக்கியுள்ளார், இந்த திரைப்படங்களை தொடர்ந்து தற்போது வாடிவாசல் என்ற திரைப்படத்தை இயக்க இருக்கிறார்.
ராகவா லாரன்ஸ்- நடன மாஸ்டர் நடிகர் இயக்குனர் என பல திறமைகளை வைத்து தமிழ் சினிமாவில் பணியாற்றிவருகிறார், இவர் நடிப்பதை தாண்டி படத்தை இயக்கி வெற்றி கண்டுள்ளார், அந்தவகையில் ராகவா லாரன்ஸ் இயக்கிய முனி, காஞ்சனா காஞ்சனா 2, காஞ்சனா 3 ஆகிய திரைப்படங்கள் செம ஹிட் அடைந்தது.
அட்லி- இயக்குனர் அட்லி இயக்கிய திரைப்படங்கள் சர்ச்சையை சந்தித்தாலும் ஆனால் அட்லி இயக்கிய எந்த ஒரு திரைப்படமும் தோல்வி அடைந்ததில்லை அட்லி இயக்கிய ராஜாராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய நான்கு திரைப்படங்களும் வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் அடித்தது.
எஸ் ஜே சூர்யா- எஸ் ஜே சூர்யா நடிகர் மட்டுமல்லாமல் இவர் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார் இவர் இயக்கத்தில் வெளியாகிய குஷி, வாலி, இசை, நியூ, அன்பே ஆருயிரே ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார் இந்த திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.
சிறுத்தை சிவா- இயக்குனர் சிறுத்தை சிவா அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் என்று கூறலாம் இவர் இயக்கிய திரைப்படம் சிறுத்தை சிவா, வீரம், விவேகம், விவேகம் விசுவாசம் ஆகிய திரைப்படங்கள் ஆகும் தற்பொழுது இவர் அண்ணாத திரைப்படத்தை இயக்கி வருகிறார், இவர் இயக்கிய திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது.
லோகேஷ் கநகராஜ்-இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இளம் இயக்குநர்களில் ஒருவர் இவர் இயக்கிய திரைப்படம் மாநகரம் மற்றும் கைதி ஆகிய திரைப்படங்கள் ஆகும். இந்த இரண்டு திரைப்படமும் விமர்சன ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது இந்த நிலையில் தற்பொழுது விஜயை வைத்து மாஸ்டர் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார் இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
ஹெச் வினோத்- இயக்குனர் வினோத் இதுவரை இயக்கிய திரைப்படங்களான சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை ஆகிய திரைப்படங்கள் ஆகும் இந்த மூன்று திரைப்படங்களும் மாபெரும் வெற்றி பெற்று வசூல் ரீதியாக வெற்றி பெற்றது, மேலும் தற்போது அஜித்தின் வலிமை திரைப்படத்தை இயக்கி வருகிறார்.