கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு ஞானபாரதி காவல் எல்லைக்கு உட்பட்ட எம்வி லேஅவுட் என்ற பகுதியில் வசித்து வந்த ஒருவர் தான் மகேஸ்வரா இவருக்கு வெறும் 24 வயது ஆகிறது அந்த வகையில் இவர் மண்டியா மாவட்டம் மாத்தூரை சேர்ந்த கவனா என்பவரை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டார்.
இன்நிலையில் மகேஸ்வராவின் மனைவி அவரை சுத்தமாக மதிப்பது கிடையாது அது மட்டுமில்லாமல் தொடர்ந்து அவருக்கு தொல்லை கொடுத்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது இதனால் மணமுடைந்த நமது மகேஸ்வரா தன்னுடைய வாழ்க்கையில் வெறும் வெறுப்பை பார்த்து தன்னுடைய வீட்டில் தானே தூக்கு போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
இவ்வாறு நடந்த சம்பவத்தை தொடர்ந்து ஞானபாரதி காவல் நிலையத்தில் மகேஸ்வராவின் தாயார் ஒரு புகார் ஒன்றை கொடுத்துள்ளார் அந்த புகாரில் அவர் கூறியது என்னவென்றால் தனது மகனுடன் கவனா அடிகடி சண்டை போட்டுக்கொண்டு இருந்தார் என்று கூறியது மட்டும் இல்லாமல் அவர் மிகவும் தகாத வார்த்தைகளை சொல்லி அவரை திட்டியுள்ளார் என்றும் அவருடைய தாயார் கூறியுள்ளார்.
அடிக்கடி நகை வாங்கி கொடுக்கும்படி தொல்லை கொடுத்ததாகவும் மகேஸ்வராவின் தாயார் ஒரு புகார் கொடுத்துள்ளார் மேலும் என்னுடைய மகனுடைய சாவுக்கு கவனாவே முழுக்க முழுக்க காரணம் என மகேஸ்வராவின் தாயார் ரத்தினம்மா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இவ்வாறு மகேஸ்வராவின் தாயார் கொடுத்த புகாரின்படி காவல்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து மிக தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் விசாரணை முடிந்த பிறகு தான் தெரியும் என்ன ஆயிற்று என்பது.