தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனுக்கும் சீரியல் நடிகை மகாலட்சுமி இருவருக்கும் கடந்த செப்டம்பர் 1ம் தேதி அன்று திருப்பதியில் பெற்றோர்கள் சமூகத்துடன் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு இவர்களுடைய புகைப்படங்களை சோசியல் மீடியாவில் ரவீந்தர் வெளியிட அனைவரும் சர்ச்சைக்குரிய தகவல்களை கூறி வந்தார்கள்.
மேலும் என்ன இது இந்த மனுஷனுக்கு இப்படி ஒரு அழகான மனைவியா என கூறப்பட்ட நிலையில் இதற்கு ரவீந்தர் நான் குண்டாக இருந்தாலும் என்னால் அனைத்து வேலைகளையும் செய்ய முடியும் என கூறி இருந்தார். மேலும் மகாலட்சுமி ரவீந்தரை அன்பே வா சீரியல் பார்க்கச் சொல்லி கட்டாயப்படுத்தியதாகவும் இன்ஸ்டாகிராம் லைவில் கூறியிருந்தார்.
மேலும் அவர் கூறியதாவது மகாலட்சுமி நடித்த சீரியல்களை இதுவரையிலும் நான் பார்த்ததே இல்லை என்ன கூறியிருந்த நிலையில் தற்போது அன்பே வா சீரியல் பார்க்க வைத்திருக்கிறாள் என்று கூறினார். மேலும் 10 மணி ஆகிவிட்டால் ரவீந்தரை டிவி முன்பு அமர வைத்து அன்பே வா சீரியலை பார்க்க வைத்து விடுகிறார் மகாலட்சுமி அந்த சீரியலை பார்க்க முடியவில்லை எனவும் ரவீந்தர் குமுறுகிறார்.
எனவே அன்பே வா சீரியலின் மூலம் தான் எனக்கும் மகாலட்சுமிக்கும் பிரச்சனை வரும் என தெரிவித்துள்ளார். இவரைத் தொடர்ந்து மகாலட்சுமி கூறியதாவது ரவீந்தர் தயாரிப்பாளராக இருப்பதால்தான் அவரின் பணத்திற்கு ஆசைப்பட்டு திருமணம் செய்து கொண்டதாக பலரும் விமர்சித்து வருகிறார்கள் ஆனால் அவரின் தொழில் தான் எனக்கு பெரிய பிரச்சனையாகவே இருக்கிறது என தெரிவித்துள்ளார் மகாலட்சுமி.
இப்படிப்பட்ட நிலையில் மகாலட்சுமிக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது மேலும் ரவீந்தரும் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்றவர் தான். இவ்வாறு இவர்கள் இருவருமே தங்களுடைய முதல் திருமணம் தோல்விக்கு பிறகு இரண்டாவது திருமணம் செய்து உள்ளார்கள் இதன் காரணமாக தான் பலரும் இவர்களை விமர்சித்து வருகிறார்கள்.