ரசிகர்கள் பொழுதுபோக்கிற்காக சினிமாவைப் பார்த்த காலம் மாறி தற்போது செல்போனின் மூலம் பல்வேறு விதமான ஆப்களை பயன்படுத்தி பொழுதை கழிக்கின்றனர் அந்தவகையில் youtube மிகப் பெரிய அளவில் மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
டிக் டாக் செயலி மூலம் என்ட்ரியான ஜி பி முத்து தற்போது youtube – ல் பேசும் பொருளாகவே மாறி உள்ளார் அந்த அளவிற்கு இவரை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு இவரின் சேட்டையும், காமெடியும் ரசிக்கும்படி இருப்பதால் இவரது வீடியோக்கள் youtube – ல் வைரல் ஆகி வருவது வழக்கம்.
தமிழ்நாட்டில் உள்ள இளசுகள் பலரும் ஜிபி முத்துவை பார்க்க ஆசைபடுகின்றனர். அந்த அளவிற்கு இவரை வைத்து ட்ரோல், வீடியோ போன்றவை பலவும் வைரலாகி ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறார் ஒரு சிலர் இவரை கழுவி ஊற்றினாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தன்னால் முடிந்த செயலை செய்து ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறார்.
தற்போது youtube சேனல் ஒன்றை நிறுவி சிறப்பாக வலம் வருகிறார். இந்த நிலையில் ஜிபி முத்து தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக உருவாகியுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களை சமீபத்தில் சந்தித்தார்.
மேலும் அவருடன் இணைந்து ஜிபி முத்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகி உள்ளது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தற்போது இந்த ஒரு புகைப்படம் போதும் ஜிபி முத்துவை வைச்சி செய்ய முடியும் எனக் கூறி அந்த புகைப்படத்திற்கு லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்.