சினிமா உலகில் கொழுக்கு மொழுக்கு என இருக்கும் நடிகைகளுக்கு வாய்ப்புகளும் ரசிகர்களும் அதிகம் இருப்பார்கள் என்பதை குஷ்பூ அடுத்து உணர்த்தியவர் நடிகை ஹன்சிகா. தமிழில் இவர் மாப்பிள்ளை திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் அதன் பின் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்களான விஜய், சிம்பு, ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களுடன் நடித்து தனது மார்க்கெட்டை மிகப்பெரிய அளவில் உயர்த்தி தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்து ஓடினார்.
இந்த நிலையில்தான் நடிகை ஹன்சிகாவை பார்த்து ரசிகர்கள் கிண்டலும் கேளியும் செய்ய ஆரம்பித்தனர் காரணம் இளம் வயது நடிகையாக இருந்தாலும் சற்று குண்டாக இருந்ததால் இவரால் டைட்டான மற்றும் பிக்னிக் உடை போன்றவை அணிய முடியாமல் போனது இதனால் ரசிகர்கள் இவரை தொடர்ந்து சமூக வலைதள பக்கத்தில் கிண்டல் செய்தனர்
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை ஹன்சிகா சினிமாவுக்கு சிறு லீவு விட்டு உடம்பை அதிரடியாக குறைத்து மீண்டும் கம் பேக் கொடுத்து நடித்து வருகிறார் குறிப்பாக தமிழ் தெலுங்கு போன்ற மொழிகளில் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன அந்த வகையில் நடிகை ஹன்சிகா தனது ஒன்பதாவது திரைப்படமான மஹா திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த படம் வருகின்ற ஜூலை 22 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இவர்களுடன் இணைந்து இந்த படத்தில் ரேஷ்மா, சனம் செட்டி, தம்பி ராமையா உட்பட பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடந்தது. அப்பொழுது ஹன்சிகா படம் குறித்தும் சிம்பு குறித்தும் சில சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார்
அப்பொழுது அவர் சொன்னது. தன்னுடைய ஒன்பதாவது திரைப்படத்தில் நீங்கள் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டுமென சிம்புவுக்கு கால் செய்து அதுவும் ஒரு தடவ தான் பேசினேன் உடனே அவர் சம்மதம் தெரிவித்துவிட்டார். இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக அவருக்கு நான் கடமைப்பட்டுள்ளேன் அவருக்கு மிகவும் நன்றி என கூறினார்.