Vengat prabhu : தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னனாக பார்க்கப்படுபவர் தளபதி விஜய். இவர் லோகேஷ் உடன் இணைந்து “லியோ” திரைப்படத்தில் நடித்துள்ளார் படம் மிகப்பெரிய ஆக்சன் பேட் திரைப்படமாக உருவாகியுள்ளது வருகின்ற அக்டோபர் மாதம் வெளியாகும் என தகவல்களும் தெரிவிக்கின்றன.
இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் தான் “சூப்பர் ஸ்டார் பட்டம்” பிரச்சனை பெரிய விஸ்வரூபம் எடுத்துள்ளது. ரஜினி ஜெயிலர் இசை வெளியிட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து ஒரு குட்டி கதை பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதனால் சினிமா பிரபலங்கள் பலரும் இந்த பட்டம் குறித்து பேசி வருகின்றனர். இயக்குனர் வெங்கட் பிரபு விஜயை வைத்து படம் பண்ண இருப்பதால் அவரிடம் சில கேள்விகளை பத்திரிகையாளர் முன்வைத்தனர் அதற்குக் கூலாக பதில் அளித்தார் வெங்கட் பிரபு பதிலளித்தார்.
அதில் ஒன்று விஜய் உங்கள் படத்தில் நடிப்பதால் “சூப்பர் ஸ்டார் விஜய்” என்று டைட்டில் போடுவீர்களா என கேட்டுள்ளனர் அதற்கு பதில் அளித்த வெங்கட் பிரபு இல்லை.. அவர் எப்பொழுதுமே எனக்கு தளபதி தான் அதனால் அவருக்கு தளபதி என்றுதான் டைட்டில் போடுவோம்..
இந்த படம் அரசியல் படம் இல்லை மிகச்சிறந்த என்டர்டைன்மென்ட் படமாக இருக்கும் என கூறியுள்ளார். மேலும் நான் விஜய் படத்தை எடுக்கப் போகிறேன் எனத் தெரிந்ததும் முதல் ஆளாக எனக்கு வாழ்த்து சொன்னது அஜித் என கூறி உள்ளார் இந்த தகவல்கள் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகிறது.