“தி லெஜெண்ட்” பட ஹீரோ சரவணன் அருள் உடன் ஜோடி சேர்வாரா தமன்னா – அவர் சொன்ன பதிலை பாருங்கள்.!

tamanna
tamanna

தமிழ் தெலுங்கு போன்ற மொழிகளில் தொடர்ந்து டாப் நடிகர்கள் பட வாய்ப்பை கைப்பற்றி நடித்து தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்தவர் நடிகை தமன்னா குறிப்பாக தமிழில் அஜீத் விஜய் சூர்யா தனுஷ் போன்றவர்களுடன் ஜோடி சேர்ந்து தன்னை மிகப்பெரிய அளவில் உயர்த்திக் கொண்டார்.

அதன்பிறகு தனது சம்பளத்தையும் கணிசமாக உயர்த்தி வெற்றி நடை போட்டு வந்தார் இருப்பினும் நாட்கள் செல்லச் செல்ல ஒரு கட்டத்தில் தமிழில் சுத்தமாக வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு மற்றும் இந்தி பக்கம் திசை திரும்பி தொடர்ந்து பயணித்து வருகிறார்.

சினிமா உலகில் இப்படி ஓடிக்கொண்டிருந்தாலும் மீதி நேரங்களில் போட்டோ ஷூட் எடுத்து புகைப்படங்களை அள்ளி வீசி அசத்துகிறார். அதுவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன அண்மையில் கூட சரவணா ஸ்டோர் உரிமையாளர் அண்ணாச்சி தி லெஜெண்ட் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியிட்டு விழா நடந்தது. இங்கே சிறப்பு விருந்தினராக பல நடிகைகள் கலந்து கொண்டன அவர்களில் ஒருவராக நடிகை தமன்னாவும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடதக்கது இப்படி இருந்த நிலையில் நடிகை தமன்னாவிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது அது என்னவென்றால் நீங்கள் சரவணன் அவர்களுக்கு ஜோடியாக இணைந்து நடிப்பீர்களா என கேட்டுள்ளனர்.

அதற்கு பதிலளித்த தமன்னா சமீப காலமாக நான் சில படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன் தேடி வரும் எல்லா படங்களிலும் ஒப்புக்கொள்ள வில்லை அதனால் சரவணன் நடிக்கும் படத்தின் கதையும் கதாபாத்திரமும் பிடித்து இருந்தால் நடிப்பேன் என கூறினார்.