அந்த ஹீரோவுடன் ஜோடி போட்டு நடிப்பீங்களா.? பட பிரமோஷனில் கோபமடைந்த வரலட்சுமி சரத்குமார்

varalaxmi-

சினிமா உலகில் பொதுவாக நடிகைகள் டான்ஸ் ஆடுவது, ஹீரோயின்னாக நடிப்பதையே வழக்கமாக வைத்துள்ளனர் இதிலிருந்து முற்றிலுமாக மாறுபட்டவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். இவர் தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வெற்றி கண்டு வருகிறார். இப்போது கூட தமிழ், தெலுங்கில் இவருக்கு நல்ல பட வாய்ப்புகள் குவிக்கின்றன.

கடைசியாக கூட கொன்றல் பாவம் என்ற படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் கைத்தட்டல் வாங்கினார் தற்பொழுது அதே இயக்குனருடன் மீண்டும் கைகோர்த்து மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பல கேள்விகளுக்கு பதில் அளித்தார் அப்பொழுது அப்பாவுடன் இணைந்து ஏதாவது ஒரு படத்தில் நடிப்பீர்களா என்று கேட்டதும்..

வரலட்சுமி சரத்குமாருக்கு செம கோபம் வந்துவிட்டது உடனே பத்திரகாளியாக மாறிவிட்டார் ஏனென்றால் படமாக இருந்தாலும் பெத்த தகப்பனுடன் எப்படி ஜோடி போட்டு நடிப்பது என்று வரலட்சுமி டென்ஷன் ஆகிவிட்டாராம் உடனே அந்த செய்தியாளர் அந்த கேள்வியை அப்படியே மழுப்பி ரஜினி விஜய்க்கு வில்லனாக நடிப்பீர்களா என கேட்டார்.

வரலட்சுமி விஜய்க்கு வில்லியாக சர்க்கார் படத்தில் நடித்து விட்டேன். ரஜினி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் என கூறினார். மேலும் நடிகையாக இருக்கும் அவர், இந்த ரோல் பண்ண மாட்டேன் அந்த நடிகருடன் நடிக்க மாட்டேன் என்றெல்லாம் நினைக்க மாட்டேன் எந்த கேரக்டர் கொடுத்தாலும் நடிக்க தயார் என்று சவால் விட்டிருக்கிறார்.

வரலட்சுமி சரத்குமாருக்கு இணையாக அவரது அப்பா சரத்குமார் தொடர்ந்து நல்ல நல்ல படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் பொன்னியின் செல்வன் விஜயின் வாரிசு, ருத்ரன், வெங்கட் பிரபுவின் கஸ்டடி என வரிசையாக படம் பண்ணி வருகிறார் அவருடன் இணைந்து மகள் வரலட்சுமி சரத்குமார் ஜோடியாக நடிக்க வேண்டாம்.. வேறு ஏதாவது  ஏதாவது ஒரு நல்ல கேரக்டரில் நடித்தால் நன்றாக இருக்கும் என்பதை தான் செய்தியாளர் கேட்டிருக்கிறார். அதை தான் ரசிகர்களும் எதிர்பார்கின்றன்ர்.