சூர்யாவை வைத்து மீண்டும் படம் பண்ணனுமா.? ஆளை விடுங்கடா சாமி தெரிந்து ஓடிய பிரபல இயக்குனர்.

தென்னிந்திய சினிமா உலகமே கொண்டாடும் ஒரு முக்கிய நடிகராக சூர்யா இருந்து வருகிறார். ஏனென்றால் இவரது படங்கள் ஒவ்வொன்றும் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்து விருதுகளை அள்ளுகின்றன. அந்த வகையில் சூர்யா நடிப்பில் வெளியான சூரறை போற்று திரைப்படம் தேசிய விருது பட்டியலில் இடம் பெற்றது.

இதனைத் தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் கூட தமிழை தாண்டி சீன மக்கள் மத்தியிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த படங்களை தொடர்ந்து சூர்யா வணங்கான் எனும் படத்தில் பாலாவுடன் இணைந்து நடித்து வந்தார் அந்த படம் பாதியிலே கிடக்க அடுத்த சிறுத்தை சிவா உடன் இணைந்து ஒரு படத்தில் தற்போது பிஸியாக நடித்து வருகிறார்.

இது இப்படி இருக்க அடுத்தடுத்த சில முக்கிய படங்களிலும் நடிக்க சிறந்த இயக்குனர்களுடன் கை கோர்த்துள்ளார். இப்படி சூரியா தொடர்ந்து படங்களில் கமிட்டாகி நடித்தவரும் பட்சத்தில் அவரது ஒரு சில படங்கள் தோல்வியையும் சந்திக்கின்றன. அது சினிமாவில் சகஜமான ஒரு விஷயம் தான்.

அப்படி கடைசியாக சூர்யா நடிப்பில் வெளிவந்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் பெரிய அளவு வசூல் வேட்டை நடத்தவில்லை மற்றும் படமும் வெளியாகி சுமாரான வரவேற்பையே பெற்றது. இந்த நிலையில் அண்மையில் இந்த படத்தின் இயக்குனர் பாண்டிராஜ் அளித்த பேட்டியில் எதற்கும் துணிந்தவன் படம் குறித்து பேசி உள்ளார். அவர் பேசியது இந்த படம் எதிர்பார்த்த அளவு பெரிய வசூல் செய்யவில்லை..

அதனால் அடுத்த சூர்யா உடன் மீண்டும் கூட்டணி சேர்ந்து படம் எடுங்கள் என அந்த தயாரிப்பு நிறுவனம் சொன்னது ஆனால் நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். இனிமேல் குடும்ப கதையை வைத்து படம் எடுக்க வேண்டுமா என யோசிப்பதாகவும் பாண்டிராஜ் தெரிவித்துள்ளார். சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தால் இப்படி ஒரு முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளாரே இயக்குனர் பாண்டிராஜ்.