ரஜினியை வைத்து படம் பண்ணுவீர்களா.? ராஜமௌலி கொடுத்த நச் பதில் என்ன சொன்னார் தெரியுமா.?

rajini-and-rajamouli

தெலுங்கு சினிமாவில் பிரம்மாண்ட பட்ஜெட் படங்களை எடுத்து தனது திறமையை வெளிக் காட்டி அசத்தி வருபவர் இயக்குனர் ராஜமௌலி. இவர் எடுத்த திரைப்படங்கள் பட்ஜெட்டை தாண்டி கோடிக்கணக்கில் வசூல் வேட்டை நடத்துவதால் தவிர்க்க முடியாத ஒரு இயக்குனராக மாறியுள்ளார்.

பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோரை வைத்து RRR என்ற திரைப்படத்தை எடுத்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வெகுவிரைவிலேயே திரையரங்கிற்கு வெளிவர காத்திருக்கிறது.

இந்த படத்தில் மேலும் சிலர் டாப் நடிகர்கள் கைகோர்த்து ஆலியா பட் அஜய் தேவ்கன், சமுத்திரகனி  மற்றும் பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடந்தது அப்பொழுது ராஜமௌலியை ஜூனியர் என்டிஆர் ராம்சரண் மற்றும் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு பேசினர்.

அப்பொழுது ராஜமமௌலி பல்வேறு விஷயங்களுக்கு பதில் அளித்தார் அதில் ஒன்றாக நீங்கள் நேரடியாக தமிழ் படம் எடுக்கலாம் என ராஜமௌலி உடன் கேட்கப்பட்டது அதற்கு பதிலளித்த அவர் நான் யோசிப்பது தெலுங்கில் தான் அதை மொழிபெயர்க்க நல்லவர்கள் இருக்கிறார்கள் ஆனால் எனக்கு அது சரியாக இருக்காது என்று கூறினார்.

மேலும் ரஜினியை போன்ற தமிழ் டாப் ஹீரோக்களை வைத்து படம் இருக்கலாமே என கேட்கப்பட்டது அதற்கு பதில் அளித்த அவர் முதலில் கதையை எழுதி முடித்துவிட்டு அதற்குப் பிறகுதான் எந்த ஹீரோ சரியாக இருப்பார் என முடிவெடுத்து போய் கேட்பேன் ரஜினி போன்ற டாப் நடிகர் மீது எனக்கு அதிக மரியாதை இருக்கிறது ஆனால் கதை இருந்தால் தானே படமெடுக்க முடியும் என ராஜமௌலி கூறியிருந்தார்.