குணச்சித்திர நடிகராக அறிமுகமாகி பின் 2017 ஆம் ஆண்டு சென்னை 600028 என்னும் படத்தை இயக்கி இயக்குனராக அவதாரம் எடுத்தவர் வெங்கட் பிரபு. சென்னை 600028 திரைப்படம் முழுக்க முழுக்க கிரிக்கெட் சம்பந்தமான ஒரு படமாக இருந்தாலும் இந்த படத்தில் காமெடி, லவ் இருந்தால் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.
அதனைத் தொடர்ந்து கோவா, சரோஜா போன்ற காமெடி படங்களை கொடுத்து வந்த இவர் திடீரென 2011 ஆம் ஆண்டுஅஜித், அர்ஜுன் போன்ற டாப் நடிகர்களை வைத்து மங்காத்தா என்னும் ஆக்சன் ப்ளாக் படத்தை எடுத்தார் இந்த படம் வெளிவந்து 100 கோடிக்கு மேல் வசூல் செய்து வெற்றி கண்டது.
அதனைத் தொடர்ந்து சென்னை 600028 இரண்டாம் பாகம், மாநாடு போன்ற படங்கள் பெரிய வெற்றி பெற்றது. தற்பொழுது கூட நாக சைத்தான்யா வைத்து கஷ்டடி என்னும் படத்தை எடுத்துள்ளார் இந்த படம் வெகு விரைவிலேயே திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது இப்படி ஓடிக்கொண்டிருக்கும் வெங்கட் பிரபு அவ்வப்போது முக்கிய படங்களில் வில்லனாகவும், குணசித்திரகதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.
இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் சில தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் சொன்னது சென்னை 600028 வெளியான போது ஒரு புது நம்பரில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அப்போது ஒரு நபர் நானும் சென்னை 600028. நான் நன்றாக பவுலிங் போடுவேன் நல்ல டேட்டிங் ஆடுவேன்.
உங்கள் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா என கேட்டுள்ளார். எனக்கு முதலில் யார் என்னிடம் பேசுகிறார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை ஆனால் கடைசியில் அஜித் சார் என்று தெரியவந்தது என்னை நடிகர் அஜித் சார் இதுபோன்று ரொம்ப கலாய்ப்பார் என கூறியுள்ளார் இந்த தகவல் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது.