தமிழ் சினிமா உலகில் இன்று முன்னணி நடிகையாக வருபவர் திரிஷா இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பொன்னியின் செல்வன் பார்ட்-1, பார்ட் 2 போன்ற படங்கள் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து நடிகை த்ரிஷாவுக்கு மீண்டும் திரை உலகில் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
அந்த வகையில் தற்பொழுது இளம் இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளதாக கூறப்படுகிறது இது குறித்து அவரிடம் பல்வேறு தடவை அப்டேட் கேட்டாலும்..
அதற்கு வாய் திறக்காத திரிஷா அண்மையில் விருது விழா ஒன்று கலந்து கொண்டார் அப்பொழுது அவரிடம் பல்வேறு விதமான கேள்விகள் கேட்கப்பட்டது அதில் ஒன்றாக லியோ திரைப்படத்தில் உங்களுக்கும் விஜய்யும் இருக்கும் கெமிஸ்ட்ரி பற்றி சொல்லுங்கள் என கேட்டதற்கு பதில் அளித்துள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்..
விஜய்யும் நீங்களும் எப்பொழுது மீண்டும் இணைவீர்கள் என பலரும் எதிர்பார்த்தனர் எனக்கும் ஆசையாக இருந்தது. ஒரு வழியாக லியோ படத்தின் மூலம் இணைந்துள்ளோம் லோகேஷுக்கு நன்றி..இதுவரை நானும் விஜயும் நடித்த படங்களிலிருந்து லியோ படம் சற்று வித்தியாசமாக இருக்கும்..
ஆனால் லியோ படத்தில் விஜய்க்கும், எனக்கும் இருக்கும் கெமிஸ்ட்ரி மற்ற படங்களில் போல மாறாமல் சிறப்பாக வந்துள்ளது என கூறியுள்ளார். விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் லியோ படம் நிச்சயம் உங்களுக்கு பெரிய வெற்றி படமாக மாறும் அதன் பிறகு அதிக பட வாய்ப்புகளை அள்ளி திரையுலகில் நீண்ட வருஷம் ஜொலிப்பீர்கள் என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.