தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகி பின் காமெடி, வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரம் என எதுவாக இருந்தாலும் அதில் தனது முழு ஈடுபாடு செலுத்தி அதில் வெற்றி கண்டார் சமுத்திரகனி.
சமுத்திரகனி தமிழை தாண்டியும் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் இவருக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. தற்போது தன்னை மேலும் விரிவுபடுத்திக் கொள்ள சம்பளத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் நடித்து வருவதால் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன.
கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ஏலே திரைப்படம் வித்தியாசமான படமாக இருந்தது இதுவரை இல்லாத அளவிற்கு தனது அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தி மக்களிடையே நல்ல பாராட்டைப் பெற்றார். அதைத் தொடர்ந்து தற்போது ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் ரைட்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த திரைப் படத்தில் அவருக்கு ஜோடியாக சின்னத்திரை சீரியல் நடிகை விஜே மகேஸ்வரி நடிக்கிறார் என தகவல்கள் வெளியாகின்றன.
விஜே மகேஸ்வரி இதற்கு முன்பாக சென்னை 600028 என்ற திரைப்படத்தில் நடித்து சினிமா உலகில் அடியெடுத்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எது எப்படியோ சினிமாவில் நிலைத்து நிற்க தற்பொழுது விஜே மகேஸ்வரி ஆயுதமாகவே இருக்கிறார் இந்த படம் அவருக்கு நல்லதொரு வரவேற்பு கொடுக்கும் எனவும் கூறப்படுகிறது,
இந்த நிலையில் ரைட்டர் படத்திலிருந்து இருந்து ஓரிரு புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.