தமிழ்சினிமாவில் ஒரு நேரத்தில் தன்னுடைய சிறந்த நடிப்பின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் இழுத்துப்போட்டவர்தான் நடிகை ஜோதிகா இவர் சமீபத்தில் தன்னுடைய ஐம்பதாவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இவ்வாறு உருவான உடன்பிறப்பே என்ற திரைப்படமானது வருகின்ற ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியாக உள்ளது.
மேலும் இத்திரைப்படத்தின் கதை ஆனது அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இந்த திரைப்படத்தில் அண்ணன் கதாபாத்திரத்தில் நடிகர் சசிகுமார் நடிக்க உள்ளார் மேலும் தங்கையாக ஜோதிகா நடிப்பது மட்டும் இல்லாமல் அவருடைய கணவராக சமுத்திரகனி நடித்து வருகிறார்.
இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தினை ஜோதிகாவின் கணவரும் நடிகருமான பிரபல நடிகர் சூர்யா அவர்கள்தான் தயாரித்து வருகிறார். அந்த வகையில் ஜோதிகா இந்த திரைப்படம் பற்றி அளித்த பேட்டி ஒன்றில் இந்த திரைப்படத்தில் நடிக்கும் பொழுது என் மாமியார் மற்றும் கணவரோட குடும்பத்தை மாதிரியாக வைத்து தான் நடித்துள்ளேன்.
இதற்கு முக்கிய பங்கு வகித்தது இந்த ஊரடங்கு தான். அந்த வகையில் என்னுடைய இந்த சிறந்த திரைப்படத்தை தியேட்டர் வெளியிடாமல் இணையத்தில் வெளியிடுவது எனக்கு மிகுந்த கஷ்டமாக இருக்கிறது. ஆனால் இது இதற்கு முன்பாகவே திட்டமிட்டது என்ற காரணத்தினால் இதனை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும்.
அதன் பிறகு சூர்யாவுடன் நீங்கள் மீண்டும் இணைந்து நடிப்பீர்களா என்று ஜோதிகாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு நடிகை ஜோதிகா நல்ல கதை அம்சம் உள்ள திரைப்படமாக இருந்தால் நாங்கள் நிச்சயம் ஒன்றாக இணைந்து நடிப்போம் அதுமட்டுமில்லாமல் அதற்காக தான் நாங்கள் இருவரும் காத்திருக்கிறோம் என்றும் ஜோதிகா கூறியுள்ளார்.