தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவர் தனது சிறந்த நடிப்பின் மூலம் பல கோடி ரசிகர்களை கவர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் இவர் படம் வந்தாலே மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக மாறும் அளவுக்கு ரசிகர் பட்டாலத்தை கொண்டவர்.நடிகர் விஜய்க்கு கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் பிகில். இத்திரைப்படத்தில் விஜய் அவர்கள் ஃபுட்பால் கோச்சராக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக மாறியது.
இந்த படம் வசூல் ரீதியாகவும் வணிக ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இப்படம் 300 கோடி வசூல் செய்தது என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.அடுத்து அவர் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வெளிவர இருந்த நிலையில் கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவி வருவதால் அதனை தடுக்கும் விதமாக இந்தியா முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை பிரிக்கப்பட்டுள்ளது.
இத்தடை ஏப்ரல் 14 வரை நீடிக்கும் என அரசு அறிவித்தது. இதனால் வணிக வளாகங்கள், கல்லூரிகள், பள்ளி, திரைஅரங்குகள் என அனைத்தும் மூடி உள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் நிவாரண நிதிக்காக பல நடிகர்கள் நிவாரண உதவிகள் மற்றும் நிதி உதவிகளை வழங்கி வருகின்றன.அந்த வகையில் தமிழ்நாட்டில் உச்சத்திலிருக்கும் நடிகர்களில் ஒருவரான அஜித் அவர்கள் 1.25 கோடி நிதி உதவியாக அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் நடிகர் விஜய் எந்த நிதி உதவியும் அளிக்காத நிலையில் ஊரடங்கு சட்டம் முடிவடைந்தவுடன் தனது ரசிகர் மன்றம் மூலம் அந்த பகுதிகளை நிர்வகிக்க உள்ளாராம் தகவல் வெளியாகி உள்ளது. விஜய் தரப்பிலிருந்து 25 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளதாக யூடியூப் சேனல் ஒன்றில் கூரியுள்ளனர் அது தற்போது காட்டுத்தீ போல பரவி வருகிறது, அவரது ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர். ஆனால் நடுநிலையான ரசிகர்கள் இது சொல்வதற்கு நன்றாக இருக்கும் கொஞ்சம் நம்புற மாதிரி சொல்லுங்கள் எனக் கூறி வருகின்றனர்.