கிளைமாக்ஸ் காட்சியில் விஜய்க்கு நடிப்பே வரல.? பீஸ்ட் பட நடிகர் ஓபன் டாக்.! ஆச்சிரியத்தில் ரசிகர்.

vijay
vijay

விஜய் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று ஒடிய திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தை  இளம் இயக்குனர் நெல்சன் இயக்கியிருந்தார் மிக பிரமாண்ட பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்து இருந்தது.

இந்தப்படத்திற்கு அனிருத் சூப்பராக இசையமைத்திருந்தார். படத்தில் விஜயுடன் கைகோர்த்து பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், டாம் சாக்கோ, ரெடின் கிங்ஸ்லி, யோகி பாபு மற்றும் பலர் நடித்து அசத்தி இருந்தனர். படம் வெளிவருவதற்கு முன்பாகவே இந்த படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்தது.

அதேசமயம் கேஜிஎப் படத்துடன் இந்த படம் வெளிவருவதால் படம் பயங்கரமாக இருக்கும் என ரசிகர்கள் கருதினர் ஆனால் படம் எதிர்பார்த்தது போல் இல்லை. பின் ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் கிண்டலடித்தனர். இவர்கள் தான் இப்படி என்றால் இந்த படத்தில் நடித்த நடிகர் டாம் சாக்கோ சமீபத்திய பேட்டி ஒன்றில் பீஸ்ட் படத்தை வைத்து செய்துள்ளார்.

அதில் அவர் சொன்னது. இந்த திரைப்படத்தில் என்னை தூக்கிக்கொண்டே எந்தவித முகபாவனையும் இன்றி விஜய் செல்வார் ஒரு பொருளை நாம் தூங்குகிறோம் என்றால் முகத்தில் ஏதாவது ஒரு பாவனை காட்ட வேண்டும் ஆனால் விஜய் அப்படி செய்யவில்லை.

விஜய் முகத்தில் அப்படி ஒரு எக்ஸ்பிரஷன் இல்லவே இல்லை என கூறினார் மேலும் பீஸ்ட் படத்தை நீங்க பார்த்து விட்டீர்களா  என தொகுப்பாளர்  கேட்க இன்னும் அந்த சம்பவத்தை நான் செய்யவில்லை ஆனால் பீஸ்ட் படத்தை பற்றிய ட்ரோல்களை நான் பார்த்து வருகிறேன் என கூறினார்.