விஜய் படங்கள் வெளி வரும்போது பிரச்சனைகள் ஏற்படுகின்றன இருப்பினும் அதனை எல்லாம் தகர்த்தெறிந்து விஜய் படங்கள் வெளிவந்து மிகப்பெரிய சாதனை படைக்கும் அந்த வகையில் தற்போது வாரிசு படமும் மிகப்பெரிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் தில் ராஜூ தயாரிப்பில் உருவாகிய திரைப்படம் வாரிசு. இந்த படம் முழுக்க முழுக்க ஒரு குடும்ப கதையாக இருந்தாலும் இந்த படத்திலும் மாஸ் சீன்கள், காமெடி, ஆக்சன், ரொமான்ஸ் என அனைத்தும் இடம்பெற்று உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இதில் விஜய் மிகப்பெரிய ஒரு பணக்காரராக நடித்துள்ளார்
அவருடன் இணைந்து சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஜெயசுதா போன்ற டாப் நடிகர்களும் நடித்துள்ளதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வாரிசு படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக ரிலீஸ் ஆக இருக்கிறது. இதுவரை வாரிசு படத்திலிருந்து வெளிவந்த அப்டேட்டுகள் ஒவ்வொன்றும் வேற லெவலில் இருந்த நிலையில்..
அடுத்ததாக வாரிசு படக்குழு இசை வெளியீட்டு விழாவை வருகின்ற 24ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் மிகப்பெரிய அளவில் கோலாகலமாக நடத்த திட்டமிட்டு இருக்கிறது. தற்பொழுது நிலவும் சூழல் பார்த்தால் சொன்ன தேதியில் இசை வெளியீட்டு விழா நடக்குமா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது.
தற்பொழுது புதுவகையான கொரோனா சீனாவில் வேகமாக பரவி உள்ளது. தற்போது இந்தியாவிலும் பரவி உள்ளதால் மத்திய, மாநில அரசுகள் உடனே அதை தடுக்க ஆலோசனை நடத்தி வருகிறது அப்படி கட்டுப்பாடுகள் போடும் பட்சத்தில் வாரிசு இசை வெளியீட்டு விழா நடக்குமா என்பது கேள்விக்குறியாகும் என பலரும் சொல்லி வருகின்றனர். பொறுத்திருந்து பார்க்கலாம் என்ன வேண்டுமானாலும் நடக்கும்..