என்னது துணிவை போலவே வாரிசு படத்திலும் ஒரு ட்விஸ்ட் இருக்கா.? இணையத்தில் தீயாய் பரவும் புதிய தகவல்…

thunivu-vs-varisu
thunivu-vs-varisu

நாளை வெளியாக இருக்கும் வாரிசு மற்றும் துணிவு படத்திற்கா ரசிகர்கள் இன்ரிளிருந்தே ஆரவாரத்துடன் கொண்டாடி வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் துணிவு படத்தில் நடித்த சமுத்திரக்கனி அவர்கள் ஒரு பேட்டியில் துணிவில் கடைசி காட்சியில் ரசிகர்களுக்கு ஒரு ட்விஸ்ட் இருக்கு என்று கூறி இருக்கிறார் இதனால் ரசிகர்கள் இந்த துணிவு படத்திற்காக மிகவும் எதிர்பார்ப்பை அதிகமாக வைத்திருக்கிறார்கள். இந்த நிலையில் தற்போது வாரிசு படத்தில் ஒரு ட்விஸ்ட் இருப்பதாக இணையத்தில் ஒரு புதிய தகவல் பரவி வைரலாகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களாக வளம் வந்து கொண்டிருப்பவர்கள் நடிகர் அஜித் மற்றும் விஜய் இவர்கள் இருவரும் தற்போது வாரிசு மற்றும் துணிவு ஆகிய படங்களில் நடித்துள்ளனர். ஹெச் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படத்தை தொடர்ந்து தற்போது அஜித் அவர்கள் துணிவு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது இதனால் ரசிகர்கள் இன்ரே ஆரவாரத்துடன் கொண்டாடி வருகிறார்கள்.

இதேபோல நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படமும் நாளை வெளியாக இருக்கிறது இதனால் அஜித், விஜய் ரசிகர்கள் உச்சகட்ட எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். இந்த இரண்டு படங்களும் கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் கழித்து மறுபடியும் மோத இருக்கிறது. இதனை தொடர்ந்து நாளை வெளியாக உள்ள வாரிசு மற்றும் துணிவு ஆகிய இரண்டு படங்களில் எந்த படம் வெற்றி பெறும், எந்த படம் பாக்ஸ் ஆபிஸில் அதிக கலெக்ஷன் பெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் சமீபத்தில் துணிவு படத்தில் ஒரு ட்விஸ்ட் இருப்பதாக சமுத்திரகனி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். இதே போல வாரிசு படத்தில் ஒரு ட்விஸ்ட் இருப்பதாக தற்போது ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தரம் நடித்துள்ளார் மேலும் இந்த திரைப்படத்தில் குஷ்பூ, பிரபு, பிரகாஷ் ராஜ், சரத்குமார், உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.

மேலும் வாரிசு படத்தில் சரத்குமார் விஜயின் அப்பாவாக நடித்திருப்பார் ஆனால் அவர் விஜய்க்கு வளர்ப்பு அப்பாவாக இருப்பாரெனவும் குஷ்பூ தான் உண்மையான அம்மா எனவும் கூறி வருகிறார்கள்.