RRR பார்ட் 2 உருவாகுமா.? இல்லையா.? இயக்குனர் ராஜமௌலி கொடுத்த பதில்..

RRR
RRR

அண்மைக்காலமாக தென்னிந்திய சினிமா உலகில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் பல படங்கள் உருவாகின. அதில் பெரும்பாலான படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றன குறிப்பாக இயக்குனர் ராஜமௌலி பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுத்த படங்களான பாகுபலி, பாகுபலி 2 மற்றும் கடைசியாக நடிகர் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆரை வைத்து இவர் எடுத்த RRR..

படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது இந்த மூன்று படங்களுமே 500 கோடிக்கு மேல் லாபம் பார்த்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படங்களைத் தொடர்ந்து இயக்குனர் ராஜமௌலி அடுத்ததாக தெலுங்கு டாப் ஹீரோ மகேஷ்பாபுவை வைத்து ஒரு படத்தை மிக பிரம்மாண்ட பொருள் செலவில் எடுக்க இருக்கிறார்.

அந்த படம் ஒரே வித்தியாசமான திரைப்படமாக உருவாக்க இருக்கிறதாம் சரியாக சொல்ல வேண்டும் என்றால் இந்தியானா ஜோன்ஸ் போன்ற ஒரு ஹாலிவுட் ஸ்டைலில் அந்த படம் உருவாக இருக்கிறதாம். அந்த படத்தின் பட்ஜெட் மட்டுமே 500 கோடி கிட்டத்தட்ட இருக்கும் என சொல்லப்படுகிறது.

இயக்குனர் ராஜமௌலியும் அதற்கான வேலைகளில் தான் ரொம்ப தீவிரம் காட்டி வருகிறாராம். இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் ராஜமௌலியிடம் பல்வேறு விதமான கேள்விகள் கேட்கப்பட்டது அதில் ஒன்றாக RRR படத்தின் இரண்டாவது பாகத்தை எடுப்பீர்களா என கேட்டுள்ளனர்.

அதற்கு பிராமண்ட இயக்குனர் ராஜமௌலி பதில் அளித்தது என்னவென்றால்.. நானும் எனது அப்பாவும் RRR இரண்டாம் பாகம் குறித்து விவாதித்து இருக்கிறோம். அப்பா RRR படத்தின் இரண்டாவது பாகத்திற்கான  கதை வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறார் என சொல்லி உள்ளார். பிராமண்ட இயக்குனர் ராஜமௌலி இவ்வாறு சொன்னது ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் ரசிகர்களை சந்தோஷம் அடைய வைத்துள்ளது.