தமிழ் சினிமாவிற்கு சமிப காலமாக சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருவர் தளபதி விஜய். இவரது திரைப்படங்கள் வெற்றி பெறுவதோடு மட்டுமில்லாமல் ஒவ்வொன்றும் மிகப்பெரிய அளவில் வசூலை வாரிகுவிப்பதால் தொடமுடியாத உச்சத்தை எட்டி உள்ளார்.
இதனால் ரஜினிக்கு பிறகு சூப்பர் ஸ்டார் பட்டத்தை பிடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் விஜய் மாஸ்டர் திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் உடன் கை கோர்த்தது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படமும் மிகப்பெரிய ஒரு நட்சத்திர பட்டாளத்தை கைகோர்த்து எடுக்கப்பட்டு வருகிறது. விஜயுடன் இணைந்து பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், யோகி பாபு, விவிடி கணேசன், இயக்குனர் செல்வராகவன், சகோ மற்றும் சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த இந்த படத்தில் தற்போது இணைந்துள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.
பீஸ்ட் திரைப்படத்தை ஹச்டி தரத்திலும் மிக பிரமாண்ட பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் உருவாக்கி வருகிறது. இந்த திரைப்படம் தற்போது விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகிறது வருகின்ற 2022 ஆம் ஆண்டு பொங்கலை அன்று பீஸ்ட் படம் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரியவருகிறது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி உடன் கை கோர்த்தது ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார். அந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாக உள்ளது இந்த திரைப்படத்தை மிக பிரமாண்ட பொருட்செலவில் தில் ராஜு என்பவர் எடுக்க உள்ளார்.
வருகின்ற 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளதாக தற்பொழுது தகவல்கள் தெரிவிக்கின்றன.