இளைய தளபதி விஜய் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் சைக்கிளில் வந்து வாக்களித்து விட்டு சென்று அன்று இரவே தனது 65 திரைப்படத்திற்கு ஜார்ஜியா நாட்டிற்கு சென்று விட்டார் இவரது நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் பல கோடி வசூல் செய்ததை அடுத்து இயக்குனர் நெல்சன் இயக்கும் தளபதி 65 திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக ஜார்ஜியாவிற்கு சென்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அங்கு இளையதளபதி விஜயின் படபிடிப்பு புகைப்படங்கள் சமீப நாட்களாக சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி வைரலாகி வருவதை நாம் பார்த்து வருகிறோம்.
இந்நிலையில் விஜய் நடிக்கும் இத்திரைப்படத்திற்கு புதிதாக ஒரு பிரச்சனை உருவாகி உள்ளதாக ஒரு தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது ஆம் அந்த தகவல் என்னெவென்று கேட்டால் ஜார்ஜியா நாட்டில் படப்பிடிப்பு நடக்கும் நிலையில் அங்கு மழை அடிக்கடி பெய்து வருவதாக கூறுகின்றனர் இதன் காரணமாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய அடி விழும் என பலரும் கூறுகிறார்கள் என்று தகவல் கிடைத்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் மழை பெய்து கொண்டே இருந்தால் படப்பிடிப்பு நடக்க வாய்ப்பே இல்லை என பல சினிமா பிரபலங்கள் கூறுகிறார்களாம் இந்நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பட்ஜெட்டில் கொஞ்சம் அடி விழும் என தெரிகிறது.
அதுமட்டுமல்லாமல் மழை பெய்யாவிட்டால் நெல்சன் இயக்க வேண்டிய பட காட்சிகளை இயக்கிக்கொண்டு இந்தியாவிற்கு வந்து விடுவார் எனவும் தகவல் வைரலாகி வருகிறது.
மேலும் இந்த தகவல் தற்பொழுது சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக விஜய் ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது.