யார் படம் வந்தாலும் ஹீரோ அங்க நாங்க டா.. கே ஜி எஃப் 2 படத்தின் முதல் நாள் வசூல் மட்டுமே இவ்வளவு கோடி இருக்குமா.?

KGF-2
KGF-2

சினிமா உலகில் தொடர்ந்து சிறப்பான படங்களை கொடுத்து மக்கள் மற்றும்  சினிமா பிரபலங்களை கவர்ந்து இழுப்பவர் இயக்குனர் பிரசாந்த் நீல். இவர் கன்னட நடிகர் யாஷ் அவர்களை வைத்து உருவாக்கிய திரைப்படம் தான் கேஜிஎப். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்ஷன், சென்டிமெண்ட் கலந்து அதிரடி படமாக இருந்ததால்..

ரசிகர்களையும் தாண்டி மக்களையும் வெகுவாக கவர்ந்தது நாம் நினைப்பது போல கன்னட சினிமாவை மட்டுமல்ல இந்திய சினிமாவில் உள்ள ஒட்டுமொத்த ரசிகர்களையும், மக்களையும் கவர்ந்து இழுத்தது. கேஜிஎப் திரைப்படம் அந்த அளவிற்கு மிக அருமையாக இருந்தது இந்த படம் எதிர்பார்க்காத ஒரு பிரம்மாண்ட வசூலை பெற்று புதிய சாதனை படைத்தது.

இந்த படத்தை தொடர்ந்து உடனடியாக இயக்குனர் பிரசாந்த் நீல். கேஜிஎப் படத்தின் இரண்டாவது பாகத்தை அதிரடியாக உருவாக்கினார். படத்தின் பூஜை தொடங்கிய நாளில் இருந்து பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தாலும் படக்குழு பொறுமையாக கையாண்டு தொடர்ந்து ஷூட்டிங்கை நடத்தி முடித்தது.

ஒரு வழியாக தற்பொழுது படத்தை ஏப்ரல் 14 ஆம் தேதி உலக அளவில் படம்  ரிலீஸ் செய்ய உள்ளது. இந்த படத்திலிருந்து படக்குழு பல்வேறு அறிவிபை வெளியிட்டு படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது தற்போது டிக்கெட் புக்கிங் கூட சிறப்பாக நடைபெற்று வருகிறது ஏற்கனவே கேஜிஎஃப் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்த நிலையில் தற்பொழுது  டிக்கெட் புக்கிங் ஜோராக..

இருப்பதால் நிச்சயம் முதல் நாளில் மட்டுமே KGF 2 மிக பிரம்மாண்ட வசூலை அள்ளும். முதல் நாளில் மட்டும் சுமார் 40 கோடிக்கு மேல் வசூல் செய்ய வாய்ப்பிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. படம் நன்றாக இருக்கும் பட்சத்தில் அதை விட அதிக வசூலை அள்ள வாய்ப்பு இருக்கு..