ஐபிஎல் சீசன் 8 அணிகள் மோதி வந்த நிலையில் இரண்டு அணிகள் புதிதாக சேர்க்கப்பட்ட 10 அணிகள் விளையாட இருக்கிறது. அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய இரு அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன இதனை அடுத்து ஐபிஎல் 15 சீசன் வேற லெவலில் தொடங்கியிருக்கிறது அதற்கு முன்பாக வருகின்ற ஜனவரி மாதத்தில் மேகா ஏலம் தொடங்க இருக்கிறது.
இப்போ ஒவ்வொரு அணியும் சிறந்த நான்கு வீரர்கள் தன்வசப்படுத்திக் கொண்டு மீதி வீரர்களை ரிலீஸ் செய்து உள்ளது அதிலும் குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலாவதாக ரவீந்திர ஜடேஜாவை 16 கோடி கொடுத்து தக்க வைத்துக்கொண்டது இரண்டாவதாக தல தோனி 12 கோடி கொடுத்து தக்கவைத்துக்கொண்டது 3வது வீரராக மொயின் அலி 8கோடி, நான்காவதாக ருத்ராஜ் 6 கோடி என தக்கவைத்துக்கொண்டது.
மீதி வீரர்களை வெளியே விட்டு உள்ளதால் ஏலத்தில் கலந்து கொள்ள இருக்கின்றனர் இந்த நிலையில் சிஎஸ்கே அணிக்காக பல வருடங்களாக விளையாடி வரும் நட்சத்திர வீரரான பிராவோ அணியில் தக்க வைக்கப்படவில்லை. இதுகுறித்து அவர் அண்மையில் பேட்டி ஒன்றில் பிராவோ கலந்து கொண்டார். அப்பொழுது அவரிடம் பல்வேறு விதமான கேள்விகள் கேட்கப்பட்டது.
சிஎஸ்கே உங்களை மெகா ஏலத்தில் எடுக்கும் என நம்புகிறீர்களா என கேள்வி கேட்கப்பட்டது அதற்கு அவர் ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கு பெறுவேன் சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுக்குமா என்பது சரியாக தெரியவில்லை ஆனால் எந்த அணி எடுத்தாலும் அந்த அணிக்கு தனது சிறந்த பங்களிப்பை கொடுத்து அசத்துவேன் என கூறினார்.
சிஎஸ்கே அணியும் சிறந்த வீரர்கள் எப்போதும் எடுக்க அதிகம் ஆர்வம் காட்டும் அந்த வகையில் டுப்லஸ்ஸிஸ், பிராவோ, ரெய்னா ஆகியோர் எடுக்க கடும் போட்டி போடும் ஆனால் இருப்பினும் ஏலம் என்று வந்து விட்டால் எது வேண்டுமானாலும் நடக்கலாம் பொறுத்திருந்து பார்ப்போம்.