மிகப்பெரிய தொழிலதிபரான அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் தளபதி விஜய் ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறிய தகவல் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனால் இதனைப் பற்றி சரியாக தெரியாமல் ரசிகர்கள் பெரும் குழப்பத்தில் இருந்து வந்த நிலையில் தற்போது உண்மை தகவல் வெளியாகி உள்ளது.
தளபதி விஜய் தமிழ் திரைவுலகில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவில் கலக்கி வருகிறார்.மேலும் இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது இவ்வாறு இவருடைய ஒவ்வொரு திரைப்படமும் பல கோடிகளை வசூல் செய்து சாதனை பெற்று வருகிறது.
மேலும் விஜய் தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திற்கும் சம்பளமாக 100 கோடி வரை வாங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிப்பது மட்டுமல்லாமல் தளபதி விஜய் ஒரு சில சொந்த தொழில்களும் செய்து வருவதாகவும் கூறி வந்த நிலையில் அதில் சில திருமண மண்டபங்களும் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் தற்போது தளபதி விஜய் திருமண மண்டபங்களை ரிலையன்ஸ் நிறுவனத்திற்காக வாடகைக்கு விட இருப்பதாக கூறப்படுகிறது. ரிலையன்ஸ் நிறுவனம் விஜயுடன் ஒப்பந்தம் போட்டுள்ள நிலையில் திருமண மண்டபங்களை வாடகைக்கு பெற்று சூப்பர் மார்க்கெட் நடத்த இருப்பதாக பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் விரைவில் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.
சாலிகிராமத்தில் உள்ள ஷோபா திருமண மண்டபம், பேரூரில் சங்கீதா திருமண மண்டபம் உள்ளிட்ட ஒரு சில திருமண மண்டபங்கள் விஜயின் சொந்தமான திருமண மண்டபங்கள் எனவும் விரைவில் திருமண மண்டபங்கள் சூப்பர் மார்க்கெட்டாக மாறும் எனவும் கூறப்படுகிறது. இது குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்பொழுது நடிகர் விஜய் வாரிசு என்ற திரைப்படத்தில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முடிந்த நிலையில் அடுத்ததாக சென்னையில் நடத்துவதற்காக படக்குழுவினர்கள் திட்டமிட்டு வருகிறார்கள் மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப்படத்தின் நடிக்க உள்ளார் என்பதை குறிப்பிடத்தக்கது.