“ஆஸ்கார் விருது” விழாவை அலறவிட்ட வில் ஸ்மித்.. பொண்டாட்டியை பத்தி தப்பா பேசியவனை மேடையிலேயே அடித்த சம்பவம்.

will smith

சினிமா உலகில் சிறந்த நடிகர், நடிகைகள், சிறந்த படம், சிறந்த இயக்குனர் யார் என்பதை கலந்து யோசித்து சினிமா உலகில் சிறந்த விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருது கொடுக்கப் படுகிறது அப்படி இந்த வருடத்திற்கான ஆஸ்கார் விருது அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது.

இதில் பல சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகை, காமெடியன் என அனைவருக்கும் விருதை கொடுத்து அழகு பார்ப்பது வந்தது அப்படி நடைபெற்று இருக்கும் போது ஒரு சிறப்பான சம்பவம் நடந்தது. இந்த 2022 ஆண்டிற்கான  ஆஸ்கார் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட படங்களில் ஒன்று கிங் ரிசார்ட். இந்த படத்தில்  வில் ஸ்மித் நடித்திருந்தார்.

இந்த படத்தில் இவரது நடிப்பு சிறப்பாக இருந்த காரணத்தினால் அவருக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது அப்போது ஒரு சிறப்பான சம்பவம் நடந்தது அதாவது வில் ஸ்மித்தின் மனைவி ஜாடா வில் ஸ்மித்தை பிரபல காமெடி நடிகர் கிரிஸ் ராக் என்பவர் தவறாக பேசி உள்ளார்.

கோபப்பட்ட வில் ஸ்மித் அங்கு சென்று மேடையிலேயே கிறிஸ் ராக்கை பளார் என கன்னத்தில் அறைந்துள்ளார்.  இவர் இவ்வாறு அடிக்க முக்கிய காரணம் தனது மனைவி  ஜாடா வில் ஸ்மித்தின்  மொட்டை பார்த்து ஏளனமாக பேசி தானாம். அதனால் தான் கோபமடைந்த வில் ஸ்மித் அடித்ததாக கூறினார்.

will smith
will smith

இதனால் ஆஸ்கார் விருது கொடுக்கும்  அரங்கமே அலறியது. பின் ஒரு கட்டத்தில் கோபத்தை குறைத்துக் கொண்ட நடிகர் வில் ஸ்மித் இந்த மன்னிப்பு கேட்டுக் கொண்டார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது இதோ நீங்களே பாருங்கள்.