நடிகர் சிம்பு சிறந்த கதைகளை செலக்சன் செய்து தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டி அசத்தி வருகிறார் அந்த வகையில் மாநாடு படத்தில் சிம்புவின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது படமும் வெளிவந்து 100 கோடிக்கு மேல் வசூல் அள்ளி சாதனை படைத்தது இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிம்பு நடித்த திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு.
இந்த படத்தை கௌதம் மேனன் இயக்கி உள்ளார். ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் ஐசரி கணேசன் மிகப் பிரம்மாண்ட பொருள் செலவில் இந்த படத்தை தயாரித்தார் படம் இன்று கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் பெருமளவு மாஸ் காட்சிகள் இல்லை என்றாலும் படம் சூப்பராக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் சிம்பு அதிரடியாக தனது உடல் எடையை குறைத்து 18 வயது சின்ன பையனாக நடித்து அசதி உள்ளார் அது ரசிகர்களுக்கு ரொம்ப பிடித்து போய் உள்ளதாம். தொடர்ந்து படம் நல்ல வரவேற்பை பெற்று வருவதால் வெந்து தணிந்தது காடு முதல் நாளில் மிகப்பெரிய ஒரு வசூலை அள்ளி நிற்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் அடுத்த அடுத்த நாட்களிலும் சிம்புவின் வெந்து தணிந்தது காடு நல்ல வசூலை அள்ளும் சொல்லப்போனால் மாநாடு ரேஞ்சுக்கு இந்த படம் நல்ல வசூலை அள்ளும் என கணிக்கப்பட்டுள்ளது. இப்படி இருக்கின்ற நிலையில் வெந்து தணிந்தது காடு இரண்டாவது பாகம் உருவாகுமா என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். நமக்கு கிடைத்த தகவல் என்னவென்றால் முதல் பாகத்தை ரசிகர்கள் எப்படி கொண்டாடுகிறார்கள்.
அதன் வசூலை பொறுத்தே அதன் இரண்டாவது பாகத்தை எடுக்க வேண்டுமா வேண்டாமா என படக் குழு திட்டம் தீட்டும் என தெரிய வருகிறது. தற்பொழுது இந்த படத்திற்கு நிலவும் நிலைமையை பார்த்தால் நல்ல வரவேற்பு தான் கிடைத்துள்ளது அப்படி என்றால் இரண்டாவது பாகம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகபட்சமென சொல்லப்படுகிறது.