சினிமா உலகில் அண்மை காலமாக வரலாற்றுப் படங்கள் எடுக்கப்பட்டு வெளிவந்து வெற்றி பெறுகின்றன அந்த வகையில் இயக்குனர் மணிரத்தினம் 500 கோடி பட்ஜெட்டில் பொன்னியின் செல்வன் நாவலை வரலாற்று படமாக எடுத்துள்ளார் அதை இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்ய இருக்கிறார் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி கோலாகலமாக வெளியாக இருக்கிறது.
அதுவும் ஐந்து மொழிகளில் ரிலீசாகுவதால் இந்த படத்தை பெரிய அளவில் பலரும் எதிர்பார்த்து இருக்கின்றனர். இந்த படத்தில் ஐஸ்வர்யாராய், திரிஷா, பிரகாஷ்ராஜ், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, கார்த்தி, பார்த்திபன், விக்ரம், கிஷோர், சரத்குமார், பிரபு மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
படம் வெளிவர இன்னும் கொஞ்ச நாட்கள் தான் இருக்கிறது இதனால் ப்ரொமோஷன் வேலைகளை செய்து வருகின்றனர். முதலில் பட குழு தமிழ் நாட்டைச் சுற்றி பல்வேறு இடங்களில் பிரமோஷன் செய்து வந்த நிலையில் அதனை தொடர்ந்து மும்பை கேரளா ஹைதராபாத் ஆகிய பகுதிகளிலும் ப்ரோமோஷன் செய்து வருகின்றன.
அண்மையில் கூட பொன்னியின் செல்வன் படக்குழு டெல்லி சென்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து அசத்தியது என்பது குறிப்பிடத்தக்கது இப்படி இருக்கின்ற நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் முதல் நாளில் எவ்வளவு கோடி வசூலிக்கும் என்பது குறித்து ஒரு தகவல் கிடைத்துள்ளது. 500 கோடி பட்ஜெட்டில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் ஏற்கனவே டிக்கெட் புக்கிங்கில் பல கோடிகளை அள்ளிய நிலையில்..
தமிழகத்தில் மட்டும் முதல் நாளில் பொன்னியின் செல்வன் திரைப்படம் சுமார் 25 கோடி வரை வசூல் அள்ளும் என கணக்கிட்டுள்ளனர். பொறுத்திருந்து பார்க்கலாம் சொல்லவும் முடியாது அதை விட அதிகமாக அள்ள வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது ஏனென்றால் ரசிகர்களையும் தாண்டி சினிமா பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரபலங்களை இந்த படம் எதிர்பார்க்க வைத்துள்ளது.