லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது திரையை பயணத்தில் எத்தனையோ வெற்றி படங்களை கொடுத்திருந்தாலும் நிஜ வாழ்க்கையில் பல சர்ச்சைகளை சந்தித்து வந்தார் இதிலிருந்து தன்னை திருத்திக்கொள்ள லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடிக்கும் போது இயக்குனர் விக்னேஷ் சிவனிடம் காதல் வயப்பட்டார்.
இருவரும் ஆறு வருடங்களுக்கு மேல் காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூன் ஒன்பதாம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவருக்கும் இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். தற்பொழுது நயன்தாராவின் வாழ்க்கை சிறப்பாக போய்க்கொண்டிருக்கிறது மறுபக்கம் அவருடைய சினிமா பயணமும் நன்றாகவே இருக்கிறது.
கைவசம் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் அதனைத் தொடர்ந்து இறைவன், டெஸ்ட், நயன்தாரா 75 ஆகிய படங்களும் இருக்கின்றன இது போதாத குறைக்கு ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
இதன் மூலம் நல நல படங்களையும் அவர் வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இயக்குனரும் நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் சமீபத்திய பேட்டி ஒன்றில் நயன்தாரா குறித்து பேசி உள்ளார் அதில் அவர் சொன்னது நானும், நயன்தாராவும் இரவு ஒரு மணிக்கு வீட்டுக்கு வந்து சாப்பிடும் பழக்கம் உள்ளது சாப்பிட்டு விட்டு அந்த தட்டுகளை நயன்தாரா கழுவி விடுவார்.
எங்களுடைய வீட்டில் மொத்தம் பத்து வேலைக்காரர்கள் இருந்தாலும் நள்ளிரவில் அவர்கள் தூங்கிக் கொண்டிருப்பதால் அவர்களை எழுப்ப வேண்டாம் எனக் கூறி அவரே தட்டை கழுவி விடுவாராம். நான் இது சம்பந்தமாக கேட்டால் சாப்பிட்ட தட்டை அப்படியே போட்டுவிட்டு வருவது நல்லது இல்லை எனக் கூறி அதை கழுவி விட்டு தான் வருவார். இந்த தகவல் தற்பொழுது நயன்தாரா ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.