அஜித்தை பழிவாங்க குடும்பத்தோடு பாலிவுட் பக்கம் செல்லும் நயன்தாரா.? எடுத்த அதிரடி முடிவு

nayanthara
nayanthara

தென்னிந்திய சினிமாவில் இன்று நம்பர் ஒன் நடிகையாக பார்க்கப்படுபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் தனது திரை பயணத்தை ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரையிலும் டாப் ஹீரோக்களின் படங்களில் நடிப்பது இல்லை என்றால் சோலோ படங்களில் நடித்து வெற்றிகளை குவித்து வருகிறார் இதனால் எனவோ அவருடைய மார்க்கெட் ஒரு பொழுதும் கீழே இறங்கியது கிடையாது.

இப்படி சினிமாவில் வெற்றி கண்டு வந்த நயன்தாரா கடந்த ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நயன்தாரா அதிகப்படியான பட வாய்ப்பை  அள்ளி நடித்து வருகிறார்.

கைவசம் நயன்தாரா 75, ஜவான் மற்றும் பெயரிடப்படாத ஒன்னு, ரெண்டு படங்களில் கமிட் ஆகியும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி நயன்தாரா வெற்றி கண்டாலும் அவருடைய கணவர் தொடர்ந்து சறுக்கல்களை சந்தித்து வருகிறார். நடிகர் அஜித்தின் 62வது திரைப்படத்தை முதலில் விக்னேஷ் சிவன் தான் இயக்க இருந்தது.

ஆனால் அவர் சொன்ன முழு கதை அஜித் மற்றும் லைகா நிறுவனத்திற்கு பிடிக்காமல் போனதால் விக்னேஷ் சிவனை படத்தில் இருந்து விலக்கியது இதில் செம்ம கடுப்பான நயன்தாரா அஜித் மற்றும் லைக்கா நிறுவனத்திற்கு பதிலடி கொடுக்க அந்த கதையில் வேறு ஒரு நடிகரை நடிக்க வைக்க நயன்தாராவும் விக்னேஷ் சிவன் முடிவெடுத்தனர் ஆனால் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதியை தொடர்ந்து பல நடிகர்கள் இந்த கதையை நடிக்க மறுத்தால்..

தமிழ் ஹீரோவே என வேண்டாம் என முடிவெடுத்து தற்பொழுது பாலிவுட்டில் நடிகரை சந்தித்து கணவரின் கதையை கூறியிருக்கிறார் அவரும் சம்மதம் தெரிவித்துவிட்டார் இதனால் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் பாலிவுட் பக்கம் தற்போது மூட்டை முடிச்சை கட்டிக் கொண்டு போக உள்ளார்களாம். அந்தப் படத்தை இவர்களுடைய ரௌடி பிச்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க இருக்கிறது என கிசுகிசுக்கப்படுகிறது