மாதவன் போட்ட காசை எடுப்பாரா.. கல்லா காட்ட முடியாமல் திணறும் ராக்கெட்ரி.? இதுவரை அள்ளிய வசூல்.

madhavan-
madhavan-

நடிகர் மாதவன் ஒரு ஹீரோவாக பல்வேறு வெற்றி படங்களை கொடுத்து அசத்தியவர் ஆனால் அண்மை காலமாக நடிகர் மாதவன் நடிப்பை தாண்டி படங்களை தயாரிப்பது இயக்குவதுமாக இருந்து வருகிறார். கடந்த நான்கு வருடங்களாக ஒரே ஒரு திரைப்படத்திற்காக மற்றும் ரொம்ப மெனக்கெட்டு உள்ளார்.

ராக்கெட்ரி நம்பி படத்தை இயக்கி நடிக்கவும் செய்தார். மேலும் இந்த படத்தை அவரே தயாரித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ராக்கெட்ரி நம்பி படம் முழுக்க முழுக்க  நம்பினாராயணனின் வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது.

இந்த படம் அண்மையில் திரையரங்கில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது தொடர்ந்து மாதவனுக்கு நல்ல மகிழ்ச்சியான செய்திகள் வெளி வந்தாலும் வசூல் ரீதியாக இந்த திரைப்படம் சொல்லி கொள்ளும்படி பிரம்மாண்ட வசூலை அள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் நாளில் மட்டுமே ராக்கெட்ரி நம்பி திரைப்படம் சுமார் ஒரு கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த நாளிலும் ஒரு கோடி தான் வசூல் செய்துள்ளது. இதனால் தற்பொழுது படத்தின் மொத்த செலவையும் பட குழு எடுத்தாலே நல்லது என்பது போல இருக்கிறது.

ஏன் என்றால் நாளுக்கு நாள் ஒரு படம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தாலும் வசூல் ரீதியாக அதிகரிக்க வேண்டும் ஆனால் ராக்கெட்ரி தொடர்ந்து ஒரே அளவிலான வசூலை அள்ளி வருகிறது. வசூலில் சற்று முன்னேற்றம் அடைந்தால் மட்டுமே  லாபத்தை பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது வருகின்ற நாட்களில் இந்த படம் லாபத்தை அள்ளினால் நல்லது.