கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களின் சாயில் பீஸ்ட் படத்தில் இடம்பெறுமா – பேட்டியில் நெல்சன் கூறியது.! என்ன தெரியுமா.?

beast
beast

தமிழ் திரை உலகில் கவனிக்க ஓடக்கூடிய ஒரு இயக்குனர்களில் ஒருவர் நெல்சன் திலீப்குமார் இவர் இதுவரை இரண்டு திரைப்படங்களை தான் இயக்கி உள்ளார் ஆனால் அந்த இரண்டு திரைப்படங்களும் மாபெரும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது மட்டுமல்லாமல் மக்களை பெருமளவு கவர்ந்ததால் வெகு விரைவிலேயே பட்டி தொட்டி எங்கும் இவரது பெயர் பரவியது.

தற்போது கூட இவர் டாப் நடிகரான தளபதி விஜய்யை வைத்து பீஸ்ட் என்னும் படத்தை எடுத்து வருகிறார். படத்தின் சூட்டிங் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு வருகிறது ஆரம்பத்தில் ஜார்ஜியா போன்ற இடங்களில் படமாக்கப் பட்டு வந்தாலும் ஒரு கட்டத்தில் இந்தியாவை சுற்றி தான் படமாக்கப்படுகின்றன.

அந்த வகையில் சென்னை டெல்லி ஆகிய இடங்களில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது படக்குழு கேரளாவில் தனது சூட்டிங்கை தொடங்கி உள்ளது. இதை வெற்றிகரமாக முடித்துவிட்டு ரஷ்யாவில் ஷூட்டிங்கை நடத்த போவதாக தெரியவருகிறது இதுவரை படப்பிடிப்பு 75% முடிவடைந்து உள்ளதாக தெரியவருகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் இவர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் இதுவரை 100 கோடியை நெருங்கி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் நெல்சன் தற்போது செம்ம சந்தோஷத்தில் இருக்கிறார். இந்த நிலையில் நெல்சன் திலிப்குமார் சமீபத்திய பேட்டி ஒன்றில் பீஸ்ட் படத்தின் கதை குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர் டாக்டர் மற்றும் கோலமாவு கோகிலா ஆகிய படங்களைப் போலவே இந்தப் படமும் ஒரு வித்தியாசமான கதை எனக்கும் தளபதிக்கும் ஒரு புதிய கதை என அவர் கூறியுள்ளார்.