Actress Keerthi Suresh will accept father’s request: கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதும் பரவி உள்ளது என்பதை அனைவரும் அறிந்ததே. இந்த வைரஸின் தாக்கத்தினால் உலகமே தலைகீழாக உள்ளது. இதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ள்ளனர். அதுமட்டுமின்றி நாளுக்கு நாள் இதன் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மேலும் மக்கள் பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.
கொரோனா வைரஸ் சாமானிய மக்களை மட்டுமின்றி தொழிலதிபர்கள், திரைத்துறையினர் என அனைவரையுமே தாக்கியுள்ளது. கோடிகளில் பணம் சுழலும் திரையுலகமே ஸ்தம்பித்துப் போயுள்ளது. அந்த வகையில் கீர்த்தி சுரேஷின் தந்தையும் பிரபல தயாரிப்பாளருமான கேரளாவை சேர்ந்த தயாரிப்பாளர் சங்கத்தில் முக்கிய பொறுப்பு வகித்து வரும் சுரேஷ் கூறியதாவது.
கொரோனா வைரஸினால் படப்பிடிப்புகள் பாதியிலே நிற்கிறது. அதுமட்டுமல்லாமல் சில திரைப்படங்கள் ரிலீஸுக்காக காத்திருக்கிறது. இதனால் தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்யும் வகையில் மீண்டும் படப்பிடிப்பு துவங்கியதும் தயாரிப்பாளர்களுக்கு கைகொடுக்கும் வகையில் நடிகர், நடிகைகளும், தொழில்நுட்பக் கலைஞர்களும் தங்கள் ஊதியத்திலிருந்து 50 சதவீதத்தை குறைத்துக்கொள்ளவேண்டும் என்று கூறிஉள்ளார்.இவர் விடுத்த இந்த கோரிக்கைக்கு தயாரிப்பாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் இதனை அறிந்த மற்ற நடிகர், நடிகைகள் கேள்வி ஒன்றை எழுப்பி உள்ளனர். அதாவது நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு போன்ற படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தனது சம்பளத்தில் பாதி சம்பளத்தை பெற ஒத்துக் கொள்வாரா என்று கேட்ட வண்ணம் உள்ளனர். இதற்கு பதில் கீர்த்தி சுரேஷ் தான் கூற வேண்டும்.